பொது செய்தி

தமிழ்நாடு

சுரங்கப்பாதையை பயன்படுத்தாத பயணிகள்: விதிமுறை மீறலால் விபத்து அபாயம்

Added : நவ 22, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, ரோடு விரிவாக்கப்பணிகள் முழுமை பெறாத நிலையில், விதிமீறல்களால் விபத்து அபாயம் உள்ளது.பொள்ளாச்சியில், புது பஸ் ஸ்டாண்டில் உள்ளூர், வால்பாறை மற்றும் கேரளாவுக்கு செல்லும் பஸ்களும்; பழைய பஸ் ஸ்டாண்டில், கோவை, திருப்பூர், பழநி உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லும் பஸ்களும் நிறுத்தி இயக்கப்படுகின்றன.மக்களின் வசதிக்காக, புது

பொள்ளாச்சி:பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, ரோடு விரிவாக்கப்பணிகள் முழுமை பெறாத நிலையில், விதிமீறல்களால் விபத்து அபாயம் உள்ளது.பொள்ளாச்சியில், புது பஸ் ஸ்டாண்டில் உள்ளூர், வால்பாறை மற்றும் கேரளாவுக்கு செல்லும் பஸ்களும்; பழைய பஸ் ஸ்டாண்டில், கோவை, திருப்பூர், பழநி உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லும் பஸ்களும் நிறுத்தி இயக்கப்படுகின்றன.
மக்களின் வசதிக்காக, புது மற்றும் பழைய பஸ் ஸ்டாண்ட்களை இணைக்கும் வகையில், சுரங்க நடைபாதை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது.ஆனால், பொதுமக்கள் யாரும் சுரங்கபாதையை பயன்படுத்துவதில்லை. பயணிகள் பெரும்பாலும், ரோட்டை கடந்து பஸ் ஸ்டாண்டுக்கு செல்கின்றனர்.வாகனங்கள் வேகமாக வரக்கூடிய சூழலில், பாதையை கடக்க ஆர்வம் காட்டும் பயணிகள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.பஸ் ஸ்டாண்ட் அருகே ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்காலிக ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பணிகள் முழுமையடையாத சூழலில், வாகனங்கள் சுற்றிச் செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
'சிக்னல்' அகற்றப்பட்ட நிலையில், ரவுண்டானா அமைக்கும் பகுதியில், வாகனங்கள் தாறுமாறாக செல்வதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் சீறிப்பாய்ந்து செல்லும் ரோட்டில், பொதுமக்கள் ரோட்டை கடப்பதால் வீண் அசம்பாவிதங்கள் நடைபெற வாய்ப்புள்ளது.இப்பிரச்னைக்கு உரிய தீர்வு காண, போலீசார் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். ரோடு விரிவாக்கப் பணிகளை முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X