பொது செய்தி

தமிழ்நாடு

பாலக்காடு - திருச்செந்தூர் ரயில் இயக்குங்க! பயணிகள் சங்கம் வலியுறுத்தல்

Added : நவ 22, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பாலக்காடு - திருச்செந்துார் பயணியர் ரயில் மீண்டும் இயக்க வேண்டும், என, ஆனைமலை ரயில் பயணிகள் சங்க ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.பொள்ளாச்சி - பாலக்காடு வழித்தடத்தில் உள்ள, ஆனைமலை ரோடு ரயில்வே ஸ்டேஷனின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், ஆனைமலை பகுதி மக்களின் ரயில்வே சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பெற, ஆனைமலை ரோடு ரயில் பயணிகள் சங்கம்

பொள்ளாச்சி:பாலக்காடு - திருச்செந்துார் பயணியர் ரயில் மீண்டும் இயக்க வேண்டும், என, ஆனைமலை ரயில் பயணிகள் சங்க ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.பொள்ளாச்சி - பாலக்காடு வழித்தடத்தில் உள்ள, ஆனைமலை ரோடு ரயில்வே ஸ்டேஷனின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், ஆனைமலை பகுதி மக்களின் ரயில்வே சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பெற, ஆனைமலை ரோடு ரயில் பயணிகள் சங்கம் துவங்கப்பட்டுள்ளது.சங்கத்தின் இரண்டாவது ஆலோசனை கூட்டம் சுப்பேகவுண்டன்புதுாரில் நடந்தது. கூட்டத்துக்கு, சுப்பேகவுண்டன்புதூர் ஊராட்சி தலைவர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். சங்கத்தின் தலைவர் முருகன், செயலாளர் பிரசாத் முன்னிலை வகித்தனர்.தாத்தூர் ஊராட்சி தலைவர் அன்னபூரணி, ஆத்துப்பொள்ளாச்சி ஊராட்சி தலைவர் தண்டபாணி ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்று, சங்கத்தின் செயல்பாடுகளுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:ஆனைமலை மற்றும் வால்பாறை தாலுகாவுக்கான ஒரே ரயில்வே ஸ்டேஷன், ஆனைமலை ரோடு ஸ்டேஷன் மட்டுமே. இந்த ஸ்டேஷனை, வெளியூரில் இருந்து மாசாணியம்மன் கோவிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பொது மக்களும் அதிகம் பயன்படுத்தி வந்தனர். அவர்களுக்காக, பொள்ளாச்சி- பாலக்காடு முன்பதிவில்லா சிறப்பு ரயில், ஆனைமலை ரோடு ரயில்வே ஸ்டேஷனில் கண்டிப்பாக நின்று செல்ல வேண்டும்.பொள்ளாச்சி -- பாலக்காடு மார்க்கத்தில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ்கள் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் ஆனைமலை ரோடு ஸ்டேஷனில் நின்று செல்ல வேண்டும்.தற்போது, பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி வரை இயக்கப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் பொள்ளாச்சிக்கு காலை, 6:30 மணிக்கு வந்தடைகிறது. மக்களுக்கு வசதியாக, இந்த ரயில் பொள்ளாச்சிக்கு காலை, 7:10 மணிக்கு வருமாறு நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும்.சங்கம் சார்பில், ஆனைமலை தாலுகா சுற்று வட்ட கிராம மக்களைச் சந்தித்து, ஆனைமலை ரோடு ரயில்வே ஸ்டேஷனின் முக்கியத்துவத்தைக் எடுத்துக் கூறி, விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஆதரவு திரட்ட வேண்டும்.மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்த, பாலக்காடு -- திருச்செந்துார் பயணியர் ரயிலை மீண்டும் இயக்க, மக்கள் பிரதிநிதிகள், ரயில்வே நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இவையுள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X