பொது செய்தி

தமிழ்நாடு

நாட்டுப்புற கலைஞருக்கு வங்கி கடன் வசதி

Added : நவ 22, 2021
Share
Advertisement
சென்னை : ''நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில், உறுப்பினராக பதிவு செய்யும் செயல்பாடுகள் எளிமையாக்கப்படும்,'' என, கலை பண்பாட்டுத் துறை கமிஷனர் பிரகாஷ் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: தமிழகத்தில் நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் உள்ளனர். அவர்களில், பெரும்பாலானோர் கல்வித் தரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளனர். அதனால், அவர்களுக்கு நாட்டுப்புற

சென்னை : ''நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில், உறுப்பினராக பதிவு செய்யும் செயல்பாடுகள் எளிமையாக்கப்படும்,'' என, கலை பண்பாட்டுத் துறை கமிஷனர் பிரகாஷ் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: தமிழகத்தில் நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் உள்ளனர். அவர்களில், பெரும்பாலானோர் கல்வித் தரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளனர். அதனால், அவர்களுக்கு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு செய்வது குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது. மேலும், வாரியத்தில் உறுப்பினராவதற்கான நடைமுறைகள் எளிமையானதாக இல்லை.

அவற்றை மாற்றி, எளிமையாக பதிவு செய்யும் முறையில் மாற்ற வேண்டும். இதுகுறித்து, கலை பண்பாட்டு துறை உதவி இயக்குனர்களுடன் ஆலோசித்து வருகிறோம். விரைவில், செயல் திட்டம் தயாரிக்கப்படும்.கொரோனா பாதிப்புக்கு பின், திருவிழாக்கள் நடத்துவது, பொது நிகழ்ச்சிகள் நடத்துவதில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால், நாட்டுப்புற கலைஞர்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு தேசிய வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் வாயிலாக, 'கிரெடிட் கார்டு'களை வழங்கி, குறைந்த வட்டியில் கடன் பெறும் வசதியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X