சுற்றுலா தலங்கள் வளர்ச்சி திட்டம்: வழிகாட்டி நெறிமுறைகளுக்கு தமிழக அரசு ஒப்புதல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுலா தலங்கள் வளர்ச்சி திட்டம்: வழிகாட்டி நெறிமுறைகளுக்கு தமிழக அரசு ஒப்புதல்

Added : நவ 22, 2021
Share
சென்னை, : தமிழகத்தின் சுற்றுலா திட்டங்களை மேம்படுத்த, 'சுற்றுலாத் தலங்கள் வளர்ச்சி திட்டம்' வழிகாட்டி நெறிமுறைகளுக்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.சுற்றுலாத்துறை சார்பில் வரைவு திட்டம் மற்றும் அதை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. சுற்றுலாத்துறை சார்பில், 300 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றை மேம்படுத்த திட்டங்கள் தயார்
 சுற்றுலா தலங்கள்  வளர்ச்சி திட்டம்: வழிகாட்டி நெறிமுறைகளுக்கு தமிழக அரசு ஒப்புதல்

சென்னை, : தமிழகத்தின் சுற்றுலா திட்டங்களை மேம்படுத்த, 'சுற்றுலாத் தலங்கள் வளர்ச்சி திட்டம்' வழிகாட்டி நெறிமுறைகளுக்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

சுற்றுலாத்துறை சார்பில் வரைவு திட்டம் மற்றும் அதை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. சுற்றுலாத்துறை சார்பில், 300 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றை மேம்படுத்த திட்டங்கள் தயார் செய்து, முன்னுரிமை அடிப்படையில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு, தமிழக அரசு ஒப்புதல் வழங்கி, அரசாணை வெளியிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள, முதலியார் குப்பம் படகு குழாம் மற்றும் அருகில் உள்ள தீவுப்பகுதி, 50 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் அறிவித்தார்.அதன்படி, கழிப்பறை, உடை மாற்றும் அறை, காத்திருப்பு அறை, நுழைவு வளைவு, குடிநீர் வசதி, பூங்கா போன்றவை ஏற்படுத்த, 50 லட்சம் ரூபாய் ஒதுக்கி, சுற்றுலாத்துறை செயலர் சந்திரமோகன் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X