பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.2.27 கோடியுடன் சிக்கிய பெண் அதிகாரிக்கு பதவி உயர்வு

Added : நவ 22, 2021 | கருத்துகள் (34)
Share
Advertisement
சென்னை : லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் சிக்கிய பெண் அதிகாரிக்கு, புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.பொதுப்பணித் துறையில், வேலுார் மாவட்ட தொழில்நுட்ப கல்விப் பிரிவு செயற்பொறியாளராக பணியாற்றி வருபவர் ஷோபனா, 58. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள இவரது வீடு மற்றும் அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் 3ம் தேதி சோதனை நடத்தினர்.அப்போது, 2.27 கோடி ரூபாய் ரொக்கம், தங்க நகைகள்
 ரூ.2.27 கோடியுடன் சிக்கிய பெண் அதிகாரிக்கு பதவி உயர்வு

சென்னை : லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் சிக்கிய பெண் அதிகாரிக்கு, புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

பொதுப்பணித் துறையில், வேலுார் மாவட்ட தொழில்நுட்ப கல்விப் பிரிவு செயற்பொறியாளராக பணியாற்றி வருபவர் ஷோபனா, 58. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள இவரது வீடு மற்றும் அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் 3ம் தேதி சோதனை நடத்தினர்.

அப்போது, 2.27 கோடி ரூபாய் ரொக்கம், தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள், பினாமி பெயரிலான சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இந்நிலையில், ஷோபனா திடீரென பதவி உயர்வுடன், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மண்டல பொதுப்பணித் துறையில், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு துணை கண்காணிப்பு பொறியாளராக பதவி உயர்வு வழங்கி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை, பொதுப்பணித் துறை செயலர் தயானந்த கட்டாரியா பிறப்பித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ram - mayiladuthurai,இந்தியா
26-நவ-202113:22:14 IST Report Abuse
ram சூப்பர் விடியல்
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
25-நவ-202112:54:45 IST Report Abuse
RajanRajan கையும் களவுமாக பிடிக்க பட்ட இதிலும் கூடவா நீதிமன்றம் நீதிபதிகள் வழக்கை தானாக முன்வந்து விசாரிக்காமல் ஏன் மயான அமைதி காக்கிறது.. படா மர்மமாய் தெரியல்லே மக்களே. விடியலுக்கு தான் விடியலா. தயிர் வடை தர்மம் காக்க படுவது விடியலுக்கே தெரியல்லியோ என்னவோ. உயிக்காட்டு சுடலைமாடன் சாமிக்கு வெட்டுறா அந்த கிடாய...
Rate this:
Cancel
Venkat - Chennai,இந்தியா
25-நவ-202109:12:40 IST Report Abuse
Venkat ஊழல் தொகை இலக்கை அடைந்ததால் பதவி உயர்வு ,கிரேட் விடியல்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X