ரூ.2.27 கோடியுடன் சிக்கிய பெண் அதிகாரிக்கு பதவி உயர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.2.27 கோடியுடன் சிக்கிய பெண் அதிகாரிக்கு பதவி உயர்வு

Added : நவ 22, 2021 | கருத்துகள் (34)
Share
சென்னை : லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் சிக்கிய பெண் அதிகாரிக்கு, புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.பொதுப்பணித் துறையில், வேலுார் மாவட்ட தொழில்நுட்ப கல்விப் பிரிவு செயற்பொறியாளராக பணியாற்றி வருபவர் ஷோபனா, 58. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள இவரது வீடு மற்றும் அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் 3ம் தேதி சோதனை நடத்தினர்.அப்போது, 2.27 கோடி ரூபாய் ரொக்கம், தங்க நகைகள்
 ரூ.2.27 கோடியுடன் சிக்கிய பெண் அதிகாரிக்கு பதவி உயர்வு

சென்னை : லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் சிக்கிய பெண் அதிகாரிக்கு, புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

பொதுப்பணித் துறையில், வேலுார் மாவட்ட தொழில்நுட்ப கல்விப் பிரிவு செயற்பொறியாளராக பணியாற்றி வருபவர் ஷோபனா, 58. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள இவரது வீடு மற்றும் அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் 3ம் தேதி சோதனை நடத்தினர்.

அப்போது, 2.27 கோடி ரூபாய் ரொக்கம், தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள், பினாமி பெயரிலான சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இந்நிலையில், ஷோபனா திடீரென பதவி உயர்வுடன், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மண்டல பொதுப்பணித் துறையில், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு துணை கண்காணிப்பு பொறியாளராக பதவி உயர்வு வழங்கி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை, பொதுப்பணித் துறை செயலர் தயானந்த கட்டாரியா பிறப்பித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X