ராணுவ முகாமுக்கு அருகே குண்டு வீச்சு

Added : நவ 22, 2021
Share
Advertisement
பதன்கோட் : பஞ்சாபில் ராணுவ முகாமுக்கு அருகில் மர்ம நபர்கள் சிலர் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். பஞ்சாபில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தின் எல்லை பகுதியில் அமைந்துஉள்ள பதன்கோட் மாவட்டத்தில் ராணுவ முகாம் உள்ளது.இங்கு, நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் வந்த சில மர்ம நபர்கள், முகாமுக்கு வெளியே கையெறி குண்டு
 ராணுவ முகாமுக்கு அருகே குண்டு வீச்சு

பதன்கோட் : பஞ்சாபில் ராணுவ முகாமுக்கு அருகில் மர்ம நபர்கள் சிலர் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

பஞ்சாபில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தின் எல்லை பகுதியில் அமைந்துஉள்ள பதன்கோட் மாவட்டத்தில் ராணுவ முகாம் உள்ளது.இங்கு, நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் வந்த சில மர்ம நபர்கள், முகாமுக்கு வெளியே கையெறி குண்டு ஒன்றை வீசிவிட்டு தப்பிச்சென்றனர். அந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. எனினும் இந்த தாக்குதலில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.

தகவலறிந்து விரைந்த பாதுகாப்புப் படையினரும், போலீசாரும், அங்கு சிதறிக்கிடந்த குண்டு பாகங்களை சேகரித்தனர். தடயவியல் குழுவினரும் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து, தாக்குதல் நடத்திய நபர்களை அடையாளம் காணும் முயற்சிகளில் போலீசார் ஈடுபட்டுஉள்ளனர்.

இதற்கிடையே மாநிலத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து கேட்டறிய, அமிர்தசரஸ் மற்றும் ஜலந்தர் மண்டல உயர் அதிகாரிகளுடன், மாநில துணை முதல்வர் சுக்ஜிந்தர் சிங் ராந்தவா நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X