ஆந்திர தலைநகர் அமராவதி மட்டுமே: ஐகோர்ட்டில் மாநில அரசு தகவல்

Added : நவ 22, 2021
Share
Advertisement
அமராவதி : 'ஆந்திராவுக்கு ஒரே தலைநகராக அமராவதி மட்டுமே இருக்கும்' என, அம்மாநில அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சி நடக்கிறது.ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக 2014ல் பிரிக்கப்பட்டதை அடுத்து, தெலுங்கானாவின் தலைநகராக ஐதராபாத் அறிவிக்கப்பட்டது. ஆந்திராவின் புதிய
ஆந்திர தலைநகர் அமராவதி மட்டுமே: ஐகோர்ட்டில் மாநில அரசு தகவல்

அமராவதி : 'ஆந்திராவுக்கு ஒரே தலைநகராக அமராவதி மட்டுமே இருக்கும்' என, அம்மாநில அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சி நடக்கிறது.ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக 2014ல் பிரிக்கப்பட்டதை அடுத்து, தெலுங்கானாவின் தலைநகராக ஐதராபாத் அறிவிக்கப்பட்டது. ஆந்திராவின் புதிய தலைநகராக அமராவதியை அறிவிக்க திட்டமிடப்பட்டது. இதற்கான வளர்ச்சி பணிகளை அப்போது ஆட்சியில் இருந்த தெலுங்கு தேசம் கட்சி துவங்கியது.

ஆந்திராவில் ஆட்சி மாறிய பின், மாநில வளர்ச்சியை பரவலாக்கும் நோக்கத்தில் மூன்று தலைநகரங்களை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார்.அதன்படி கர்னுால் நீதித்துறை தலைநகராகவும், விசாகப்பட்டினம் ஆட்சி நிர்வாகத்தின் தலைநகராகவும், அமராவதி சட்டசபை தலைநகராகவும் அறிவிக்க திட்டமிடப்பட்டது. மூன்று தலைநகரங்களுக்கான சட்ட திருத்த மசோதா கடந்த ஆண்டு ஆந்திர சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு, எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். வளர்ச்சி பணிகளுக்காக நிலங்களை வழங்கிய விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மூன்று தலைநகர சட்டத்துக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஆந்திர உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

இந்த விவகாரத்தில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்ததை அடுத்து, ஆந்திர உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இந்நிலையில் நேற்று நடந்த விசாரணையின் போது, அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஸ்ரீராம் நீதிமன்றத்தில் கூறியதாவது:

ஆந்திராவுக்கு ஒரே தலைநகராக அமராவதியை மட்டும் அறிவிக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப் பட்டது. எனவே, மூன்று தலைநகர் அமைக்க நிறைவேற்றப்பட்ட மசோதா, சட்டசபையில் விரைவில் திரும்ப பெறப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.இதையடுத்து, ஆந்திர தலைநகர் அறிவிப்பில் நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X