'வீர் சக்ரா' விருது பெற்றார் கேப்டன் அபிநந்தன் வர்தமான்

Added : நவ 22, 2021
Share
Advertisement
புதுடில்லி : பாகிஸ்தான் ராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்திய விமானப்படை 'குரூப் கேப்டன்' அபிநந்தன் வர்தமானுக்கு நேற்று 'வீர் சக்ரா' விருதை வழங்கி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கவுரவித்தார்.வான்வழி தாக்குதல்கடந்த 2019 பிப்., 27ம் தேதி புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பாலக்கோட் பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது
 'வீர் சக்ரா' விருது பெற்றார் கேப்டன் அபிநந்தன் வர்தமான்

புதுடில்லி : பாகிஸ்தான் ராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்திய விமானப்படை 'குரூப் கேப்டன்' அபிநந்தன் வர்தமானுக்கு நேற்று 'வீர் சக்ரா' விருதை வழங்கி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கவுரவித்தார்.


வான்வழி தாக்குதல்


கடந்த 2019 பிப்., 27ம் தேதி புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பாலக்கோட் பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படையினர் வான்வழி தாக்குதல் நடத்தினர். அதில் விங் கமாண்டராக இருந்த அபிநந்தன் வர்தமான், 'மிக் - 21' ரக போர் விமானத்தை இயக்கினார்.

அப்போது பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக தாக்குதல் நடத்திய பாக்., ராணுவத்தின் 'எப் - 16' ரக போர் விமானத்தை, அபிநந்தனின் போர் விமானம் சுட்டு வீழ்த்தியது. பாக்., ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில், அபிநந்தனின் விமானம் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விழுந்தது. அதில் உயிர் தப்பிய அபிநந்தனை பாக்., ராணுவம் கைது செய்தது. மத்திய அரசு தரப்பில் கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக அபிநந்தனை பாக்., ராணுவம் விடுவித்தது.

பின், அபிநந்தனின் துணிச்சலை பாராட்டும் விதமாக அவருக்கு வீர் சக்ரா விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் அவருக்கு விமானப் படையில் குரூப் கேப்டன் நிலைக்கு பதவி உயர்வும் அளிக்கப்பட்டது. கவுரவிப்புஇந்நிலையில் டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருதை வழங்கி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கவுரவித்தார்.

மேலும் சில ராணுவ அதிகாரிகளுக்கு, 'கீர்த்தி சக்ரா, ஷவுரிய சக்ரா' உள்ளிட்ட உயரிய விருதுகள் வழங்கி கவுரவிக்கப் பட்டனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், 'என் வயிறு புலி தங்கிஇருந்த குகை. என் மகன் போர்க்களத்தில் இருப்பான் என புறநானுாறு பாடிய, தமிழ் மண்ணின் வீரம் செறிந்த மகனாக, செருக்களம் சந்தித்து, தாயகம் காத்த அபிநந்தனை வாழ்த்துகிறேன்' என தெரிவித்து உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X