ஒரு போன் போதுமே! பஸ் ஸ்டாண்டில் விதிமீறல்

Added : நவ 22, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில், பயணிகள் பயன்படுத்தும் நிழற்கூரை பகுதியில், இருசக்கர வாகனங்கள் விதிமீறி நிறுத்தப்படுவது அதிகரித்து உள்ளது. இதனால், பயணிகள் பஸ் வரும் வரை காத்திருக்க இடவசதியின்றி அவதிப்படுகின்றனர்.என்.கமலக்கண்ணன், பொள்ளாச்சி.வெறும் காத்து தாங்க வருதுவால்பாறை அடுத்துள்ள கருமலை பஜார் பகுதியில் உள்ள, பொதுக்கழிப்பிடம் தண்ணீர் வசதி இல்லாத நிலையில்,

பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில், பயணிகள் பயன்படுத்தும் நிழற்கூரை பகுதியில், இருசக்கர வாகனங்கள் விதிமீறி நிறுத்தப்படுவது அதிகரித்து உள்ளது. இதனால், பயணிகள் பஸ் வரும் வரை காத்திருக்க இடவசதியின்றி அவதிப்படுகின்றனர்.என்.கமலக்கண்ணன், பொள்ளாச்சி.வெறும் காத்து தாங்க வருதுவால்பாறை அடுத்துள்ள கருமலை பஜார் பகுதியில் உள்ள, பொதுக்கழிப்பிடம் தண்ணீர் வசதி இல்லாத நிலையில், பயன்படுத்த முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். மக்கள் நலன் கருகி, தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும்.-கா.வேல்முருகன், கருமலை எஸ்டேட்.கொசு மருந்து அடிக்கணும்!பொள்ளாச்சி மகாலிங்கபுரம் வ.உ.சி. வீதியில், குப்பை சரிவர அகற்றுவதில்லை. இதனால், துர்நாற்றம் நிலவுகிறது. கொசுத்தொல்லையும் அதிகரித்து வரும் நிலையில், கொசு ஒழிப்புக்கு புகை மருந்து அடிப்பதில்லை. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கே.நிர்மலாதேவி, பொள்ளாச்சி.பொத்தல் ரோடால் சிரமம்கிணத்துக்கடவு - கொண்டம்பட்டி ரோடு, ரயில்வே பாலம் முதல், கருணாகரபுரி பிரிவு வரை, ரோடு உருக்குலைந்து பொத்தலாக காட்சியளிக்கிறது. ரோட்டில் போக்குவரத்து அதிகமுள்ளதால், அவசர அவசியம் கருதி சீரமைக்க வேண்டும்.என். சந்திரசேகர், இம்மிடிபாளையம்.ஆக்கிரமிப்பு கடைகளால் அவதிஆனைமலை முக்கோணம் அருகே, 'ப்ரீ லெப்ட்' பகுதியில், ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்துள்ளது. பயணிகள் நிழற்கூரையையும் ஆக்கிரமித்துள்ளனர். இதனால், வாகனங்கள் செல்ல முடியாமலும், மக்கள் காத்திருக்க வசதியின்றியும் அவதிப்படுகின்றனர். ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும்.கே.கிஷோர், ஆனைமலை.குப்பை அகற்றப்படுமா?மடத்துக்குளம் அருகே, கொமரலிங்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சுற்றுப்பகுதியில் குப்பை, கழிவுகள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் அங்கு வரும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே குப்பையை சுத்தமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.கு.கண்ணன், கொமரலிங்கம்.கொசுத்தொல்லை தாங்க முடியலமடத்துக்குளம் அரசு மருத்துவமனை வளாகத்தில், கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதன் காரணமாக, அங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கொசுமருந்து அடிக்க பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வ.சண்முகம், மடத்துக்குளம்.நிழற்கூரை வேண்டும்உடுமலை தளி ரோட்டில் யூனியன் ஆபீஸ் பஸ் ஸ்டாப் உள்ளது. இங்கு நிழற்கூரை இல்லாததால், பயணிகள் வெயிலிலும், மழையிலும் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே அங்கு நிழற்கூரை அமைக்க நகராட்சி நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்ய வேண்டும்.எல். கார்த்திகேயன், உடுமலை.ரோடு சமப்படுத்த வேண்டும்தளி ரோடு சிக்னல் அருகே பொளளாச்சி ரோட்டில் பாதாளச்சாக்கடை மூடி மேடாக உள்ளது. இதனால், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்துக்குள்ளாக வேண்டியதுள்ளது. இதை சீரமைக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆர்.சந்திரசேகர், உடுமலை.வாகனங்கள் ஆக்கிரமிப்புஉடுமலை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, ரோட்டில் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.டி. முனுசாமி, உடுமலை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X