விதி மீறி வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் அகற்றம்| Chennai District News | Dinamalar

தமிழ்நாடு

விதி மீறி வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் அகற்றம்

Added : ஆக 06, 2011
Share
சென்னை : சென்னை மாநகரில், விதி மீறி வைக்கப்பட்ட விளம்பரப் பலகைகள், அதிரடியாக அகற்றப்பட்டுள்ளன.மாநகராட்சியின் 10 மண்டலங்களில் வைக்கப்பட்டிருந்த விதி மீறிய விளம்பரங்களை, மண்டல அலுவலர்கள் தலைமையிலான குழு, அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டது. கட்டடங்கள் மற்றும் சாலைகளில், புதிய கட்டமைப்பு ஏற்படுத்தி வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்கள், பிளக்ஸ் மற்றும் வினைல்

சென்னை : சென்னை மாநகரில், விதி மீறி வைக்கப்பட்ட விளம்பரப் பலகைகள், அதிரடியாக அகற்றப்பட்டுள்ளன.மாநகராட்சியின் 10 மண்டலங்களில் வைக்கப்பட்டிருந்த விதி மீறிய விளம்பரங்களை, மண்டல அலுவலர்கள் தலைமையிலான குழு, அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டது. கட்டடங்கள் மற்றும் சாலைகளில், புதிய கட்டமைப்பு ஏற்படுத்தி வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்கள், பிளக்ஸ் மற்றும் வினைல் போர்டுகள் மூலம், விளம்பரம் செய்ய வைக்கப்பட்டு இருந்தவை அகற்றப்பட்டன.மண்டல வாரியாக நடந்த இந்த அதிரடி நடவடிக்கையில், 1,531 பிளக்ஸ் மற்றும் வினைல் போர்டுகள், 182 சுவர் விளம்பரங்கள் மற்றும் இதர விளம்பரங்கள் என, 1,800 விளம்பரப் பலகைள் அப்புறப்படுத்தப்பட்டன.மண்டலங்களில் வைக்கப்பட்டிருக்கும், அனுமதிக்குப் புறம்பான பிற விளம்பரங்களையும் அகற்ற, தொடர் நடவடிக்கையில் ஈடுபடுமாறு மண்டல அலுவலர்களை, மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார்.போக்குவரத்துக்கு இடையூறாகவும், வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்கும் வகையிலும் விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டு இருந்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அவற்றை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.மேயர் சுப்ரமணியன் கூறுகையில், ""சென்னை மாநகரின் அழகைக் கூட்டும் வகையில், புராதன ஓவியங்கள் மற்றம் தமிழகத்தின் கலாச்சாரத்தை விளக்கும் வண்ண சித்திரங்கள் வரையப்பட்டு இருந்தன. இவற்றின் மீது, அத்துமீறி விளம்பரங்களை செய்திருந்தனர். அவை அப்புறப்படுத்தப்பட்டு உள்ளன. இனிமேல், அவற்றின் மீது விளம்பரங்கள் செய்யாமல் கவனிக்குமாறு, அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்,'' என்றார்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X