பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவமனையில் 'நம்ம டாய்லெட்' பணியாளர்கள் எதிர்பார்ப்பு

Added : நவ 22, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை அரசு மருத்துவமனையில், நோயாளிகளின் உறவினர்கள் நலன் கருதி, நவீன சுகாதார வளாகம் அமைக்க, கோரிக்கை எழுந்துள்ளது.உடுமலை அரசு மருத்துவமனை, அறுவை சிகிச்சை அரங்கு, விபத்து, அவசர சிகிச்சை என, 25 சிகிச்சைப் பிரிவுகளுடன் செயல்படுகிறது. இங்கு, தினமும், புறநோயாளிகள், உள்நோயாளிகள் என, ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.ஆனால், நோயாளிகளின்

உடுமலை:உடுமலை அரசு மருத்துவமனையில், நோயாளிகளின் உறவினர்கள் நலன் கருதி, நவீன சுகாதார வளாகம் அமைக்க, கோரிக்கை எழுந்துள்ளது.உடுமலை அரசு மருத்துவமனை, அறுவை சிகிச்சை அரங்கு, விபத்து, அவசர சிகிச்சை என, 25 சிகிச்சைப் பிரிவுகளுடன் செயல்படுகிறது. இங்கு, தினமும், புறநோயாளிகள், உள்நோயாளிகள் என, ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.ஆனால், நோயாளிகளின் உறவினர்கள் நலன் கருதி, போதிய கழிப்பறை வசதி கிடையாது. இதனால், உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகிறவர்களை காண வரும் உறவினர்கள், திறந்த வெளிப்பகுதிகளைக் கழிப்பறைகளாக பயன்படுத்துகின்றனர்.இதனால், மருத்துவமனை வளாகம் மற்றும் சுற்றுப்பகுதியில், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையில், அரசு மருத்துவமனையில் நவீன சுகாதார வளாகம் அமைக்கும் வகையில் 'நம்ம டாய்லெட்' திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.மருத்துவப்பணியாளர்கள் கூறுகையில், 'போதுமான கழிப்பறை வசதிகள் கிடையாது. இதுபோன்ற காரணத்தால், மருத்துவமனை வளாகத்தில், சுகாதார நடவடிக்கைகளை பின்பற்ற முடியாத நிலை ஏற்படுகிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X