யானைகள் நடமாட்டம்; தொழிலாளர்கள் தவிப்பு

Added : நவ 22, 2021
Share
Advertisement
வால்பாறை:வால்பாறை எஸ்டேட் பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால், தொழிலாளர்கள் நிம்மதியிழந்து தவிக்கின்றனர்.ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட, வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இருவனச்சரகங்களிலும் வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன. குறிப்பாக வரையாடு, சிங்கவால் குரங்குகள், யானை, சிறுத்தை, புலி, காட்டுமாடு, மான் உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள்

வால்பாறை:வால்பாறை எஸ்டேட் பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால், தொழிலாளர்கள் நிம்மதியிழந்து தவிக்கின்றனர்.ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட, வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இருவனச்சரகங்களிலும் வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன. குறிப்பாக வரையாடு, சிங்கவால் குரங்குகள், யானை, சிறுத்தை, புலி, காட்டுமாடு, மான் உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன.இந்நிலையில், பருவமழைக்கு பின், வால்பாறையில் வன வளம் செழிப்பாக இருப்பதால், யானைகள் அதிக அளவில் இரு வனச்சரகங்களிலும் உலா வருகின்றன.குறிப்பாக, முடீஸ், சின்கோனா, உருளிக்கல், வில்லோனி, அக்காமலை, வாகமலை, பன்னிமேடு உள்ளிட்ட எஸ்டேட்களில், நுாற்றுக்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. பகல் நேரத்தில் தேயிலை காட்டிலும், இரவு நேரங்களில் தொழிலாளர் குடியிருப்பு பகுதியிலும் முகாமிடும் யானைகள், அங்கு பயிரிடப்பட்ட வாழைகளை உட்கொள்வதோடு, வீடு மற்றும் கடைகளை இடித்து சேதப்படுத்துகின்றன.பகல் நேரத்தில் தேயிலை காட்டில் யானைகள் முகாமிடுவதால், தேயிலை பறிக்க முடியாமலும்; இரவு நேரத்தில் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் முகாமிடுவதாலும், தொழிலாளர்கள் நிம்மதியிழந்து தவிக்கின்றனர்.வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:யானைகள் நடமாடும் பகுதியில், சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுக்க செல்லக்கூடாது. பகல் நேரத்தில் யானைகள் நடமாடும் பகுதியில் தொழிலாளர்கள் தேயிலை பறிக்க, எஸ்டேட் நிர்வாகங்கள் அனுமதிக்க கூடாது.இரவு நேரத்தில் யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் போது, தொழிலாளர்கள் யானைகளை தொந்தரவு செய்யக்கூடாது. யானைகள் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருவதால், தொழிலாளர்கள் பயப்பட வேண்டாம்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X