அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்களை ஏமாற்றும் செயல் :பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

Updated : நவ 24, 2021 | Added : நவ 22, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை :'தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாதது, மக்களை ஏமாற்றும் செயல்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:மத்திய அரசு, பெட்ரோல் மீதான வரியை, லிட்டருக்கு 5 ரூபாய், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 10 ரூபாய் குறைந்துள்ளது. அதை பின்பற்றி காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் உட்பட, இந்தியாவில் உள்ள 25 மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான
மக்களை ஏமாற்றும் செயல் : பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

சென்னை :'தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாதது, மக்களை ஏமாற்றும் செயல்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

மத்திய அரசு, பெட்ரோல் மீதான வரியை, லிட்டருக்கு 5 ரூபாய், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 10 ரூபாய் குறைந்துள்ளது. அதை பின்பற்றி காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் உட்பட, இந்தியாவில் உள்ள 25 மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை கணிசமாக குறைத்துள்ளன.
தமிழக அரசும் வரியை குறைக்கும் என எதிர்பார்த்த நிலையில், 2014ல் இருந்த அளவுக்கு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும். இந்நடவடிக்கை தானாகவே, மாநிலங்களின் வரியை குறைத்து விடும் என, தமிழக நிதி அமைச்சர் கூறி உள்ளார். இது, தமிழக மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.மத்திய அரசின் வரி அதிகரித்தபடி செல்வதால், மாநில அரசின் வரியை குறைக்க இயலாது என, நிதி அமைச்சர் கூறியிருக்கிறார். பெரும்பாலான மாநிலங்கள் வரியை குறைத்திருக்கும் போது, தமிழக அரசு மட்டும் இயலாது எனக் கூறுவது நியாயமற்றது.மத்திய அரசின் இந்த வரி விதிப்பு, தி.மு.க., ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இருந்து வருகிறது. இதையெல்லாம் தெரிந்து தானே, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதில் நிபந்தனை எதுவும் இல்லையே.தற்போது, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தினால், மத்திய அரசு விலைகளை குறைக்க வேண்டும் என, தமிழக
நிதி அமைச்சர் கூறுகிறார். இது, மக்களை ஏமாற்றும் செயல்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
23-நவ-202114:05:45 IST Report Abuse
raja விஞ்ஞானியிலியருந்து விடியல் வரை இருக்கும் அந்த ஏமாற்றும் திறமை..... உங்ககிட்ட இல்லையே தலைவா....
Rate this:
Cancel
23-நவ-202113:48:18 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் மாநில வரியை ஏற்றியது யார்? திமுகவின் இந்த 6 மாத ஆட்சி காலத்தில் இவர்கள் ஏற்றி இருந்தால் குறைக்க சொல்வதில் நியாயம் இருக்கிறது. நீ ஏத்துன வரியை இவரை குறைக்க சொல்றியே, வெக்கமா இல்ல? எதுக்கு வரியை ஏத்துன? அதுக்கு பதிலும் ஏத்துனதுக்கு மன்னிப்பும் கேட்டுட்டு அப்புறம் குறைக்க சொல்லு.
Rate this:
கிச்சாமி - மங்கலம்,இந்தியா
23-நவ-202121:05:52 IST Report Abuse
கிச்சாமி//திமுகவின் இந்த 6 மாத ஆட்சி காலத்தில் இவர்கள் ஏற்றி இருந்தால் குறைக்க சொல்வதில் நியாயம் இருக்கிறது. // அப்போ அதிமுக காலத்தில் போடப்பட்ட ரோட்டில் நீங்க போகமாட்டீங்க? அப்புடியே ஆகாயத்துல பறப்பீங்களோ? அப்போ மட்டும் 'ஆங்.. அது அரசாங்கக்கா. நாங்க வரி கெட்டினது"ன்னு பீத்துவீங்க இல்ல? அப்புடித்தான் இது ஒரு அரசாங்கத்தை நடத்த ஓட்டுப்போட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் யாருக்கு ஓட்டுப்போட்டார்களோ, அவர்களை அரசை நடத்தைச் சொல்லும் நடைமுறை. எதை..? அரசை.. கட்சியை அல்ல. ஆகவே, ஒரு அரசு செய்ததற்கு அடுத்தவர் அரசு பொறுப்பிற்கு வந்தபிறகு பொறுப்பேற்க முடியாது என்று சொல்ல முடியாது, அதுவும் வரிவருவாய் போன்ற அடிப்படை விஷயங்களில் சொல்லவே முடியாது. மாற்றியமைக்க உரிமை உள்ளது, அதுவும் வரைமுறைக்குள்தான். அதற்கு ஜனநாயக அமைப்புகளின் ஒப்புதல் வேண்டும். கொள்கை அளவிலான விஷயங்களில் மாறுபட்ட கோணம் இருப்பதில் வியப்பில்லை. (அரசு செலவில் சமாதிகள் கட்டுவதிலும் வேறுபாடில்லை). இது கட்சிப்பொறுப்பில் உள்ளவர்களுக்கும், அரசுப்பொறுப்பில் உள்ளவர்களுக்கும் தெரியும். 'தங்களுக்கு மட்டுமே எல்லாம் தெரியும்' என்று நினைத்து ஊளையிடும் சில ஊப்பீஸ்களுக்கு தெரியாததில் ஆச்சர்யமில்லை....
Rate this:
Cancel
Gopal - Chennai,இந்தியா
23-நவ-202111:42:25 IST Report Abuse
Gopal வெண்ணீறு... உனக்கெல்லாம் பேசவே தகுதியில்லை. தமிழகத்தை ஒட்டுமொத்தமாக சூறையாடிய உன் கொள்ளைக் கும்பல் கொடநாடு பங்களாவையும் விட்டுவைக்கவில்லை. உன்னோட கூட்டாளிப்பய பல அப்பாவிகளை கொலை செய்து பல ஆயிரம் கோடி பணத்தையும், பல ஆயிரம் கோடி சொத்து பத்திரங்களையும் திருடிக்கொண்டுபோனபோது நீயும் பார்த்துக்கிட்டுதானே இருந்தே? கார் டயரைப்பார்த்து கும்பிட்டு கூன் போட்டு வளைந்து குழைந்து நின்ற கும்பலில் இருக்கும் நீயும் யோக்கியன் இல்லை. சென்னை குடியிருப்பு வீடுகள் பெயர்ந்து கொட்டுவதிலேயே உன் கொள்ளை வெளியில் வந்துவிட்டது. தினம் நானும் இருக்கிறேன் என்று ஊளையிடாமல் ஒதுங்கியிரு.
Rate this:
raja - Cotonou,பெனின்
23-நவ-202115:29:44 IST Report Abuse
rajaஒட்டு மொத்தமா சூறையாடாமல் விரானm ஏரி திட்ட குழாய்களை ரோட்டோர மக்கள் வாழும் வீடுகளாக்கி கொடுத்த கட்டுமரம் வாழ்ககே...ஒட்டு மொத்தமாக சூறை யாடாமல் 1.76 லட்சம் கோடி சூறையாடிய கணியக்கா வால்கே........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X