பொது செய்தி

தமிழ்நாடு

பார்த்தால் பிஞ்சு வெண்டைக்காய் பஞ்சு நனைத்து தேய்த்தால் 'புஸ்ஸ்'

Added : நவ 22, 2021
Share
Advertisement
கோவை:'வெண்டைக்காய் வாடிப்போனது தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, ரசாயன பச்சை நிறமியை சேர்க்கும் கொடுமை நடக்கிறது. இதை கண்டுபிடிக்க, தண்ணீரில் நனைத்த பஞ்சு மட்டும் போதும்' என்கின்றனர், உணவுப் பாதுகாப்புத்துறையினர்.காய்கறி, பழங்கள் நீண்ட நாட்களுக்கு பளிச்சென இருக்க வேண்டும், பச்சை பசேல் என தெரிய வேண்டும், வாடியது தெரியக்கூடாது என்பதற்காக அவற்றின் மீது, ரசாயன

கோவை:'வெண்டைக்காய் வாடிப்போனது தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, ரசாயன பச்சை நிறமியை சேர்க்கும் கொடுமை நடக்கிறது. இதை கண்டுபிடிக்க, தண்ணீரில் நனைத்த பஞ்சு மட்டும் போதும்' என்கின்றனர், உணவுப் பாதுகாப்புத்துறையினர்.காய்கறி, பழங்கள் நீண்ட நாட்களுக்கு பளிச்சென இருக்க வேண்டும், பச்சை பசேல் என தெரிய வேண்டும், வாடியது தெரியக்கூடாது என்பதற்காக அவற்றின் மீது, ரசாயன சாயம் பூசுவதை சில வியாபாரிகள் வழக்கமாக கொண்டுள்ளனர்.இதை கண்டுபிடிக்க, காய்கறி மீது தண்ணீர் அல்லது தாவர எண்ணெயில் நனைத்த பஞ்சினை தேய்த்தால் போதும். காய்கறியில் நிறம் சேர்க்கப்பட்டிருந்தால், ஈரமான பஞ்சிலும் ஒட்டிக் கொண்டு வரும்.வெண்டைக்காய் வாடியது தெரியாமல் இருக்க, இப்படி பச்சை நிற சாயம் பூசி விடுகின்றனர். காய்ந்தாலும் மிளகாய் இப்படித்தான் பச்சையாகவே கண்களுக்கு தெரிகிறது.பட்டாணியில் பூசுவதும் இதே பச்சை நிற சாயம் தான். தர்பூசணி, அடர் சிகப்பு நிறத்தில் தெரிந்தால் தான் வாங்குவர் என்பதற்காக, அந்த நிறத்தில் ஒரு சாயத்தை பூசி விடுகின்றனர்.இவை எல்லாவற்றையுமே தண்ணீரில் நனைத்த பஞ்சை கொண்டு எளிதில் கண்டுபிடித்து விடலாம். 'மோசடி செய்வோர், ஏதோ ஒரு வகையில் முயற்சித்துக் கொண்டு தான் இருப்பர். வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருந்தால் தான், கலப்படத்தில் இருந்து தப்பிக்க முடியும்' என்கின்றனர் உணவு பாதுகாப்புத்துறையினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X