பொது செய்தி

தமிழ்நாடு

தாலிக்கு தங்கம் தாராளமாக வழங்கி...'ஜொலிக்க' வைப்பீர்களா?முதல்வரிடம் ஏழைப்பெண்கள் கேள்வி!

Added : நவ 22, 2021
Share
Advertisement
கோவை:நம்ம முதல்வர் இன்னைக்கி கலெக்டர் ஆபீஸ் வர்றாமே...அவர பாத்து, என் பேத்தி கல்யாணத்துக்கு தங்கம் கிடைக்குமான்னு கேட்டுட்டு போலாம்னு வந்தேன் சாமீ' என, தழுதழுத்த குரலில் அப்பாவியாய் கேட்டார் அந்த மூதாட்டி.இவரை போல, வாரந்தோறும் திங்கள்கிழமையானால், விண்ணப்பத்தோடு கலெக்டர் அலுவலக வாசலில் காத்திருப்போர் ஏராளம்.சமூக நலத்துறையின் கீழ், ஐந்து வகையான திருமண

கோவை:நம்ம முதல்வர் இன்னைக்கி கலெக்டர் ஆபீஸ் வர்றாமே...அவர பாத்து, என் பேத்தி கல்யாணத்துக்கு தங்கம் கிடைக்குமான்னு கேட்டுட்டு போலாம்னு வந்தேன் சாமீ' என, தழுதழுத்த குரலில் அப்பாவியாய் கேட்டார் அந்த மூதாட்டி.இவரை போல, வாரந்தோறும் திங்கள்கிழமையானால், விண்ணப்பத்தோடு கலெக்டர் அலுவலக வாசலில் காத்திருப்போர் ஏராளம்.சமூக நலத்துறையின் கீழ், ஐந்து வகையான திருமண உதவித்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
முன்பு உதவித்தொகை மட்டுமே அளிக்கப்பட்ட நிலையில், 2011 முதல், தாலிக்கு தங்கமும் வழங்கப்பட்டு வருகிறது.பள்ளிப்படிப்பு முடித்தோருக்கு, ரூ.25 ஆயிரம், பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் மற்றும் நான்கு கிராம் தங்கம் வழங்கப்பட்டது. 2016ல், உதவித்தொகையோடு எட்டு கிராம் தங்கமும் வழங்கப்பட்டு வருகிறது.கடந்தாண்டு வரை, இத்திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியானோருக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஆட்சி மாற்றத்திற்கு பின், கடந்த செப்., மாதம், இத்திட்டத்திற்கான பயனாளிகளுக்கு கூடுதல் நிபந்தனைகள் வரையறுக்கப்பட்டன.அதாவது, பெண் குடும்பத்தில் யாரும் அரசுப்பணியில் இருத்தல் கூடாது, மண்டபத்தில் திருமணம் நடத்தியிருக்கக் கூடாது, ஆண்டு வருமானம், ரூ.72 ஆயிரத்துக்குள் இருப்பது அவசியம்.மாடி வீடு, நான்கு சக்கர வாகனம் வைத்திருப்போரை, இத்திட்டத்தில் பயனாளிகளாக சேர்க்க கூடாதென குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைப்படி, பலரும் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்.2011ல் அ.தி.மு.க., ஆட்சியை பிடிக்க, தாலிக்கு தங்கம் அறிவிப்பும் முக்கிய காரணம். இரண்டாம் முறையாக ஆட்சியை பிடித்த உற்சாகத்தில், தங்கத்தின் அளவை, எட்டு கிராமாக உயர்த்தினார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.ஏழை பெண்களுக்கு பெரிதும் உதவியாக இருந்த இத்திட்டத்திற்கு, எப்போது முதல்வரே உதவித்தொகை கிடைக்கும் என்ற குரல்கள், மாநிலம் முழுக்க ஒலித்து கொண்டுதான் இருக்கிறது.
ஆட்சி மாற்றத்திற்கு பின், கடந்த செப்., மாதம், இத்திட்டத்திற்கான பயனாளிகளுக்கு கூடுதல் நிபந்தனைகள் வரையறுக்கப்பட்டன. அதாவது, பெண் குடும்பத்தில் யாரும் அரசுப்பணியில் இருத்தல் கூடாது, மண்டபத்தில் திருமணம் நடத்தியிருக்கக் கூடாது, ஆண்டு வருமானம், ரூ.72 ஆயிரத்துக்குள் இருப்பது அவசியம். மாடி வீடு, நான்கு சக்கர வாகனம் வைத்திருப்போரை, இத்திட்டத்தில் பயனாளிகளாக சேர்க்க கூடாதென குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைப்படி, பலரும் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X