அரசியல் செய்தி

தமிழ்நாடு

பொங்கல் டோக்கன் வழங்கி மக்களை இழுத்த அ.தி.மு.க.,

Added : நவ 22, 2021
Share
Advertisement
போத்தனூர்:வெள்ளலூரில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் அ.தி.மு.க., சார்பில், 50ம் ஆண்டு விழா கூட்டம் நடந்தது. இதில் கட்சியினருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. அத்துடன் மக்களுக்கு பொங்கல் பானையும் தரப்பட்டது.இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் நேற்று வ.உ.சி.பூங்கா மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இதில் பங்கேற்க வெள்ளலூர் குடிசை மாற்று வாரியத்தில்

போத்தனூர்:வெள்ளலூரில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் அ.தி.மு.க., சார்பில், 50ம் ஆண்டு விழா கூட்டம் நடந்தது. இதில் கட்சியினருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. அத்துடன் மக்களுக்கு பொங்கல் பானையும் தரப்பட்டது.இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் நேற்று வ.உ.சி.பூங்கா மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இதில் பங்கேற்க வெள்ளலூர் குடிசை மாற்று வாரியத்தில் குடியிருப்போர் காத்திருந்தனர். அப்போது அ.தி.மு.க.,வை சேர்ந்த பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் ரங்கசாமி, பேரூராட்சி நிர்வாகி காதர், மதுக்கரை ஒன்றிய நிர்வாகி முரளிதரன் ஆகியோர் பொங்கல் பானைக்கான டோக்கன் தந்தனர்.இதனால் மக்கள் அங்கு செல்ல துவங்கினர். இதனையறிந்த கோவை கிழக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு மாவட்ட அமைப்பாளர் டேனியல் ஏசுதாஸ், அங்கு சென்று சத்தமிட்டார்.போலீசாருக்கும் தகவல் தரப்பட்டது. போலீசார் வருவதையறிந்த மூவரும் அங்கிருந்து நழுவினர். அங்கு வந்த போலீசார், மக்கள் பஸ்களில் ஏறி செல்லும் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X