பொது செய்தி

தமிழ்நாடு

வண்ணமயமாய் 70 வகை பட்டாம்பூச்சிகள்! 'மொய்க்கும்' இயற்கை ஆர்வலர்கள்

Added : நவ 22, 2021
Share
Advertisement
வெள்ளலூர்:வெள்ளலூரில், நொய்யலாற்றின் ஒரு பகுதியாக குளம் அமைந்துள்ளது. இக்குளத்தினையொட்டி, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், மியாவாக்கி முறையில் வனம் உருவாக்கப்பட்டுள்ளது.தற்போது பருவமழை காலம் என்பதால். பட்டாம்பூச்சிகள் அதிகளவில் இடம் பெயர்கின்றன. கடந்த மாதம் இங்கு, 61 விதமான பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன. இதனை காண, இயற்கை ஆர்வலர்கள் மற்றும் குட்டீஸ்கள்

வெள்ளலூர்:வெள்ளலூரில், நொய்யலாற்றின் ஒரு பகுதியாக குளம் அமைந்துள்ளது. இக்குளத்தினையொட்டி, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், மியாவாக்கி முறையில் வனம் உருவாக்கப்பட்டுள்ளது.தற்போது பருவமழை காலம் என்பதால். பட்டாம்பூச்சிகள் அதிகளவில் இடம் பெயர்கின்றன. கடந்த மாதம் இங்கு, 61 விதமான பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன. இதனை காண, இயற்கை ஆர்வலர்கள் மற்றும் குட்டீஸ்கள் பெற்றோருடன் வருகின்றனர்.நேற்று, 'தி நேச்சர் அண்டு பட்டர்பிளை சொசைட்டி குழுவினர், புதிய இனங்களை கண்டறிய, பாவேந்தன் தலைமையில் வந்தனர். இதில், பேம்பூ ட்ரீ பிரவுன், சில்வர் லைன் உள்பட, ஒன்பது இன பட்டாம்பூச்சிகள் கூடுதலாக வந்துள்ளது தெரிந்தது.பாவேந்தன் கூறியதாவது:ஒரு இடத்தில், 75 இன பட்டாம்பூச்சிகள் காணப்பட்டால், அவ்விடம் பட்டாம்பூச்சிகளின் வாழ்விடமாக அமைவதற்கான சுற்றுச்சூழல் இருப்பதாக கருதப்படும். தற்போது இங்கு பேம்பூ ட்ரீ பிரவுன், சில்வர் லைனில் இரு வகை உள்பட, 70 இனங்கள் உள்ளன.பட்டாம்பூச்சிகள் காலை, 8:00 முதல், 11:00 மணி வரைதான் அதிகளவு காணப்படும். இவை சூரிய வெப்பத்திலிருந்து தனக்கு தேவையான சக்தியை பெறுகின்றன. மாநிலத்தில், 326 இன பட்டாம்பூச்சிகள் உள்ளன. நமது மாவட்டத்தில்தான் அதிகளவாக, 278 இனங்கள் காணப்படுகின்றன. இவ்விடத்தில் ஓராண்டு காலத்திற்கு பட்டாம்பூச்சி இனங்களை கண்டறிவோம்.இவ்வாறு, கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X