தினமும் சுய பரிசோதனை செய்ய வேண்டும்: ஆட்சியாளர்களுக்கு தலைமை நீதிபதி அறிவுரை

Updated : நவ 24, 2021 | Added : நவ 22, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
புட்டபர்த்தி, :''தங்களுக்குள் ஏதாவது மோசமான குணங்கள் உள்ளதா, தாங்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளும் மக்களுக்கு பயனளிக்கக் கூடியதாக உள்ளதா என்பதை ஆட்சியாளர்கள் தினமும் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்,'' என, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா கூறியுள்ளார்.ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள சத்ய சாய் உயர் கல்வி நிறுவனத்தின் 40வது பட்டமளிப்பு விழா,
தினமும் சுய பரிசோதனை,:ஆட்சியாளர்களுக்கு  அறிவுரை

புட்டபர்த்தி, :''தங்களுக்குள் ஏதாவது மோசமான குணங்கள் உள்ளதா, தாங்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளும் மக்களுக்கு பயனளிக்கக் கூடியதாக உள்ளதா என்பதை ஆட்சியாளர்கள் தினமும் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்,'' என, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா கூறியுள்ளார்.

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள சத்ய சாய் உயர் கல்வி நிறுவனத்தின் 40வது பட்டமளிப்பு விழா, புட்டபர்த்தியில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா பேசியதாவது:
நம் நாட்டின் இதிகாசங்களான, ராமாயணம், மஹாபாரதம் ஆகியவை, நாட்டை ஆள்பவர்களுக்கு, 14 மோசமான குணங்கள் இருக்கக் கூடாது என வலியுறுத்திஉள்ளன.
சுயபரிசோதனைதற்போதைய ஜனநாயக முறையில், ஆட்சியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய தினசரி பணிகளை துவக்கும்


முன் சுயபரிசோதனைசெய்து கொள்ள வேண்டும். தங்களிடம் அந்த, 14 மோசமான குணங்களில் ஏதாவது உள்ளதா என்றும், தாங்கள் எடுக்கும் அனைத்து முடிவு களுக்கும் மக்களுக்கு பயனளிப்பதாக உள்ளதா என்றும் அவர்கள் சுய
பரிசோதனை செய்ய வேண்டும். மக்களின் தேவைக்கேற்ற, விருப்பதற்கேற்ற நிர்வாகப் பணிகளையே ஆட்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டும். ஜனநாயகத்தில் மக்களே எஜமானர்கள். அவர்களுக்கு பலனளிக்கக் கூடியதையே ஆட்சியாளர்கள் செய்ய வேண்டும்.


நேர்மைசத்ய சாய்பாபாகூறுவதைப் போல, நம் நாட்டில் அனைத்து முறைகளும் சுயேச்சையாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். தற்போதுள்ள கல்வி முறை என்பது பயன்பாட்டுக்கான கல்வியாக மாறியுள்ளது. மனிதநேயம் உள்ளவர்களாக, ஒழுக்கமுள்ளவர்களாக, மற்றவர்கள் மீது அன்பு செலுத்துபவர்களாக, சகிப்புதன்மை உள்ளவர்களாக, மன்னிக்கக் கூடியவர்களாக, பரஸ்பரம் மதிக்கக் கூடியவர்களாக, சுயநலம் இல்லாதவர்களாக மாணவர்களை உருவாக்குவதே நல்ல கல்வி.

சிறந்த சேவை, அன்பு, தியாகத்துக்கு உதாரணமாக விளங்குபவர் சத்ய சாய்பாபா. கல்வி, மருத்துவ வசதி, குடிநீர் வசதி, மீட்பு நடவடிக்கைகள் என, எதுவாக இருந்தாலும் நமக்கு சரியான பாதையை அவர் காட்டியுள்ளார். வசுதேவ குடும்பகம் எனப்படும் நாம் அனைவரும் ஒரு குடும்பம் என்பதை அவர் போதித்துள்ளார்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Priyan Vadanad - Madurai,இந்தியா
23-நவ-202117:41:20 IST Report Abuse
Priyan Vadanad கீழ்க்கோர்ட்டின் தீர்ப்பை மேல் கோர்ட் 90 % நிராகரிக்கிறது. பிறகு எப்படி மக்களுக்கு சேவை செய்யும் மனநிலையில் நீதிமன்றம் இருக்கிறது என்று பொது மக்கள் நினைப்பார்கள். மிகவும் சரியான மற்றும் சிந்துக்கவேண்டிய கருத்து
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
23-நவ-202115:23:13 IST Report Abuse
 N.Purushothaman விவசாய சட்டங்கள் தொடர்பான அறிக்கையை வல்லுநர் குழு உச்சநீதிமன்றத்திடம் தாக்கல் செய்த பின்பும் அதன் மீது கடந்த ஆறு காலமாக எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் இருந்துவிட்டு தினமும் ஓவொரு அறிக்கை விடுறது தேவையற்ற வேலை என்பதை என்னிக்கு இவரு புரிஞ்சிக்குவாருன்னு தெரியல ...
Rate this:
Cancel
Veeramani Shankar - Hyderabad,இந்தியா
23-நவ-202115:01:37 IST Report Abuse
Veeramani Shankar Please advise this to your colleagues as well. People don't have faith on total judiciary i
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X