பொது செய்தி

தமிழ்நாடு

விமானநிலையத்தின் அருகே கோழிக்கழிவு : விமானம் இயக்குவதில் சிக்கல் ஏற்படும் அபாயம்

Added : நவ 22, 2021
Share
Advertisement
கோவை:கோழி இறைச்சியை கொட்டிய நபர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.கோவையின் மாநகர, மாவட்ட எல்லைப்பகுதிகளில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுவது தொடர்ந்து நடந்து வருகிறது.ஒரு சில சமயங்களில் இவ்வாறு இறைச்சிக் கழிவுகளை கொட்ட வரும் வாகனங்களை, பொதுமக்கள் சிறைபிடிப்பதால் மட்டுமே நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.ஆனால், பல சமயங்களில் ஆள் ஆரவாரம் இல்லாத

கோவை:கோழி இறைச்சியை கொட்டிய நபர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.கோவையின் மாநகர, மாவட்ட எல்லைப்பகுதிகளில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுவது தொடர்ந்து நடந்து வருகிறது.ஒரு சில சமயங்களில் இவ்வாறு இறைச்சிக் கழிவுகளை கொட்ட வரும் வாகனங்களை, பொதுமக்கள் சிறைபிடிப்பதால் மட்டுமே நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.ஆனால், பல சமயங்களில் ஆள் ஆரவாரம் இல்லாத பகுதிகளில், இதேபோன்று இறைச்சிக் கழிவுகளை கொட்டுவது தொடர்ந்து நடக்கிறது.கோவை விமான நிலையம் - எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி ரோட்டில் அழுகிய நிலையில், 250 கிலோவுக்கும் மேல் கோழி இறைச்சி, மூட்டைகளில் கட்டி கொட்டப்பட்டிருந்தது.அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசியது. கோழிகளை முழுமையாக கொட்டியுள்ளதால், அவற்றை உண்ண அப்பகுதிகளில் காகங்கள் உள்ளிட்ட பறவைகள் பறந்து வருகின்றன. மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.மாநகராட்சி நகர் நல அலுவலர் செந்தில்குமார் கூறுகையில், ''உடனடியாக கழிவுகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. அவற்றை கொட்டியவர்கள் யார் என்பது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.விமான நிலையத்தின் அருகே கழிவுகள் கொட்டப்படுவது தொடரும்பட்சத்தில், இவற்றை உண்ண வரும் பறவைகள், நாய்களால் விமானங்களை இயக்குவதற்கு பெரும் இடையூறு ஏற்படும். ஆகவே, குப்பை, இச்செயல் தொடராமலிருக்கும் வகையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது முக்கியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X