வன மரபியல் நிறுவனத்தில் நடவு பொருள் உற்பத்தி பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வன மரபியல் நிறுவனத்தில் நடவு பொருள் உற்பத்தி பயிற்சி

Added : நவ 22, 2021
Share
கோவை:தரமான நடவு பொருள் உற்பத்திக்கான பயிற்சி முகாம், கோவை இந்திய வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில் நேற்று தொடங்கியது.பசுமைத்திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 'என்விஸ்' சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையம் சார்பில் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. நிறுவன இயக்குனர் டாக்டர் குன்னிகண்ணன் பயிற்சியை தொடங்கி வைத்தார்.அவர் பேசுகையில், ''இப்பயிற்சியானது 30

கோவை:தரமான நடவு பொருள் உற்பத்திக்கான பயிற்சி முகாம், கோவை இந்திய வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில் நேற்று தொடங்கியது.பசுமைத்திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 'என்விஸ்' சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையம் சார்பில் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. நிறுவன இயக்குனர் டாக்டர் குன்னிகண்ணன் பயிற்சியை தொடங்கி வைத்தார்.அவர் பேசுகையில், ''இப்பயிற்சியானது 30 சதவீதம் வகுப்பறையிலும், 70 சதவீதம் நேரடி களத்திலும் அளிக்கப்படும். தொழில்நுட்ப அறிவு, பொருளாதாரம், சுற்றுச்சூழல் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. வெற்றிகரமான சாகுபடிக்கு தரமான நடவு பொருட்கள் அவசியம். தரமற்ற நடவு பொருட்களால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதை தவிர்க்கவே இத்தகைய பயிற்சி அளிக்கப்படுகிறது,'' என்றார்.முதுநிலை முதன்மை விஞ்ஞானி கண்ணன் வாரியர் பேசுகையில், ''தரமான நடவு பொருட்களுக்கு நாடு முழுவதும் அதிக தேவை இருக்கிறது. இதை பயிற்சி பெறுவோர் பயன்படுத்திக் கொண்டு, தொழில் முனைவோராக உருவாக வேண்டும்,'' என்றார்.தலைமை விஞ்ஞானி டாக்டர் யசோதா, பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். டாக்டர் விக்னேஸ்வரன் நன்றி கூறினார். 30 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. நாடு முழுவதும் இருந்து 40 பயிற்சியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X