முதல்வர் நிகழ்ச்சிக்கு அனுப்பப்பட்ட பஸ்கள்: பல மணி நேரம் காத்திருந்த பயணிகள் அவதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வர் நிகழ்ச்சிக்கு அனுப்பப்பட்ட பஸ்கள்: பல மணி நேரம் காத்திருந்த பயணிகள் அவதி

Added : நவ 22, 2021 | கருத்துகள் (2)
Share
கோவை:முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு அரசு பஸ்கள் அனுப்பப்பட்டதால், பயணிகள் தங்களது ஊர்களுக்கு செல்ல பல மணி நேரம் காத்திருந்து அவதிக்குள்ளாகினர்.கோவையில் பல்வேறு நலத்திட்டங்களை துவங்கி வைக்க, தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று கோவை வந்தார். இவர் வருகையை முன்னிட்டு, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அரசு பஸ்களில், கட்சியினர் கோவைக்கு அழைத்து வரப்பட்டனர். இதுதவிர, கோவை
 முதல்வர் நிகழ்ச்சிக்கு அனுப்பப்பட்ட பஸ்கள்: பல மணி நேரம் காத்திருந்த பயணிகள் அவதி

கோவை:முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு அரசு பஸ்கள் அனுப்பப்பட்டதால், பயணிகள் தங்களது ஊர்களுக்கு செல்ல பல மணி நேரம் காத்திருந்து அவதிக்குள்ளாகினர்.கோவையில் பல்வேறு நலத்திட்டங்களை துவங்கி வைக்க, தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று கோவை வந்தார். இவர் வருகையை முன்னிட்டு, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அரசு பஸ்களில், கட்சியினர் கோவைக்கு அழைத்து வரப்பட்டனர்.
இதுதவிர, கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசு, தனியார் பஸ்களில், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அழைத்து வரப்பட்டனர்.கோவை வந்த புறநகர் பகுதி மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல பஸ் ஸ்டாண்டுகளில், பல மணி நேரம் காத்திருந்து கடும் அவதிக்குள்ளாகினர்.காலையில் அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்வோர் உரிய நேரத்தில் பஸ் வராததால் காத்திருந்து அலைக்கழிப்புக்கு ஆளாகினர்.காளிமுத்து, குனியமுத்துார்: கோவைக்கு ஒரு வேலைக்காக வந்தேன். தற்போது மீண்டும் வீட்டுக்கு செல்ல, பல மணி நேரமாக காத்திருக்கிறேன். பஸ் வரவில்லை. எப்போது வரும் எனவும் தெரியவில்லை. பஸ் கிடைக்காததால் மிகவும் கஷ்டமாக உள்ளது.சாகுல் ஹமீது, காந்திபுரம்: சென்னையில் இருந்து இங்கு வந்து தங்கியுள்ளோம். தற்போது வேலந்தாவளம், திருமலையாம்பாளையத்துக்கு செல்ல காத்திருக்கின்றோம்.ஏறக்குறைய மூன்று மணி நேரத்துக்கும் மேல் காத்திருக்கிறோம். பஸ் இன்னும் வரவில்லை. எப்போது வரும் எனத் தெரியவில்லை. முதல்வர் வருவதால் பஸ்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டும்.ராதாகிருஷ்ணன், செட்டிபாளையம்: எங்கள் பகுதியில் இருந்து ஏராளமானோர் வந்துள்ளனர்.
பஸ் இல்லாததால், பலரும் காத்திருக்கிறோம். பல மணி நேரம் காத்திருந்தும் பஸ் கிடைக்கவில்லை. பலரும் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் திரும்பி விட்டனர்.சுரேஷ்குமார், பேரூர்:பஸ்களுக்காக பல மணி காத்திருந்த போதும் வரவில்லை. முதல்வர் வருவதற்காக அரசு பஸ்களை திருப்பி விடுவது முற்றிலும் தவறு. பஸ்களை மட்டுமே நம்பியுள்ள எங்களைப்போன்றவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளோம்.'அ.தி.மு.க., பாணி'யில் தி.மு.க.,தடை செய்வாரா ஸ்டாலின்முதல்வரின் அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவிற்கு, 'அ.தி.மு.க., பாணி'யில், தி.மு.க.,வினரும் ஆள் திரட்டியிருந்தனர். சுற்றுலா பஸ்கள், தனியார் ரூட் பஸ்கள், பள்ளி வாகனங்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. இதனால், பல தரப்பினரும் சிரமத்துக்கு உள்ளாகினர். வரும் காலங்களில் இதுபோன்ற 'செட்டப்' கூட்டங்களை திரட்ட, முதல்வர் ஸ்டாலின் தடை விதிக்க வேண்டும்.இதுபோன்ற கூட்டங்களுக்கு லட்சக்கணக்கில் பணம் செலவிடும் கட்சி நிர்வாகிகள், அவற்றை முறைகேடான வழியில் சம்பாதித்து ஈடுகட்டவே செய்வர்.
அவ்வாறு செய்தால், அது ஆட்சிக்கும், கட்சிக்கும் நிச்சயம் அவப்பெயரையே ஏற்படுத்தும். பொதுக்கூட்ட மைதானங்களை, 'மனித தலைகளால்' நிரப்பி தலைமையை ஏமாற்றும் முயற்சியே இது என்பது, ஊரறிந்த ரகசியம்.இதையெல்லாம் உணர்ந்து தான், மறைந்த, முன்னாள் முதல்வர் கருணாநிதி, 'கூட்டம் வந்தாலே ஓட்டு வந்து விழுந்துவிடும் என ஏமாறுபவன் அல்ல நான்...' என, பல முறை பேசியிருக்கிறார்.நல்ல பல திட்டங்களை கொண்டு வந்தாலே, அரசின் மீது மக்களுக்கு நன்மதிப்பு ஏற்பட்டு, சிறந்த வரவேற்பினைப் பெற்றுவிடும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X