பொது செய்தி

தமிழ்நாடு

முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முதல்வரிடம் எதிர்பார்ப்பு

Added : நவ 22, 2021
Share
Advertisement
கோவை:போக்குவரத்து துறையில் பணியிட மாற்றம் உள்ளிட்டவற்றில் நடக்கும் முறைகேடுகளுக்கு, முதல்வர் முற்றுப்புள்ளி வைக்க கோரிக்கை எழுந்துள்ளது.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளனம்(ஏ.ஐ.டி.யு.சி.,) தலைவர் ஆறுமுகம் கூறியுள்ளதாவது:அரசு போக்குவரத்துக்கழகங்களில் பணிபுரிந்த தொழிலாளர்கள், பல்வேறு காரணங்களால் கடந்த ஆட்சி காலத்தில் எவ்வித தேவையும்,

கோவை:போக்குவரத்து துறையில் பணியிட மாற்றம் உள்ளிட்டவற்றில் நடக்கும் முறைகேடுகளுக்கு, முதல்வர் முற்றுப்புள்ளி வைக்க கோரிக்கை எழுந்துள்ளது.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளனம்(ஏ.ஐ.டி.யு.சி.,) தலைவர் ஆறுமுகம் கூறியுள்ளதாவது:அரசு போக்குவரத்துக்கழகங்களில் பணிபுரிந்த தொழிலாளர்கள், பல்வேறு காரணங்களால் கடந்த ஆட்சி காலத்தில் எவ்வித தேவையும், நியாயமும் இன்றி இடமாற்றம் செய்யப்பட்டனர். பணியிட மாற்றம், வழித்தட பஸ்களை தொழிலாளர்களுக்கு ஒதுக்குவதிலும் முறைகேடுகள் நடந்தன.ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன், போக்குவரத்து தொழிலாளர்களின் துன்ப, துயரங்களுக்கு விடிவுகாலம் ஏற்படும் என, எதிர்பார்த்து நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.போக்குவரத்து துறை அமைச்சரும், தொழிலாளர் குடும்பங்கள் பாதிக்காதவாறு அவர்கள் பணி செய்த இடங்களுக்கு, மாற்றம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். ஆனால், இன்னும் அதே அவல நிலை தொடர்கிறது.ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில், தொழிலாளர்கள் பணியிட மாற்றம், பணி ஒதுக்குவது உள்ளிட்ட விஷயங்களில் நடைபெறும் முறைகேடுகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்க முதல்வர் ஸ்டாலின் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X