ஐரோப்பாவை மிரட்டும் தொற்று: கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்| Dinamalar

ஐரோப்பாவை மிரட்டும் தொற்று: கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்

Updated : நவ 24, 2021 | Added : நவ 22, 2021 | கருத்துகள் (3)
Share
பெர்லின் :'கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மக்கள் சரியான ஒத்துழைப்பு தரவில்லை எனில், குளிர்காலம் முடிவதற்குள் ஏராளமான உயிரிழப்புகளை சந்திக்க நேரிடும்' என, ஜெர்மனி அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கி உள்ளன. 'இந்த நான்காவது அலை கடும் விபரீதங்களை ஏற்படுத்தும்' என, சுகாதாரத் துறை
ஐரோப்பாவை மிரட்டும் தொற்று: கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்

பெர்லின் :'கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மக்கள் சரியான ஒத்துழைப்பு தரவில்லை எனில், குளிர்காலம் முடிவதற்குள் ஏராளமான உயிரிழப்புகளை சந்திக்க நேரிடும்' என, ஜெர்மனி அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கி உள்ளன. 'இந்த நான்காவது அலை கடும் விபரீதங்களை ஏற்படுத்தும்' என, சுகாதாரத் துறை வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் தொற்று தடுப்பு நடவடிக்கையாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை எதிர்த்து பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.'நிலைமையை புரிந்து கொள்ள முடியாத முட்டாள்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர்' என, நெதர்லாந்து பிரதமர் மார்க் ரட் கண்டனம் தெரிவித்தார்.'பெல்ஜியத்தில் கட்டுப்பாடுகளை எதிர்த்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நடத்தும் போராட்டங்களை ஏற்றுக் கொள்ள முடியாது' என, அந்நாட்டு பிரதமர் அலெக்சாண்டர் டி க்ரூ தெரிவித்தார்.

ஜெர்மனியில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் பொது இடங்களில் சுற்றி திரிய கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு மக்கள் மத்தியில் கண்டனங்கள் எழுந்துள்ளன.'கட்டுப்பாடுகளை பின்பற்றவில்லை எனில், தடுப்பூசி போட்டவர்கள், தொற்று வந்து குணமடைந்தவர்கள் கூட, இந்த குளிர்காலம் முடிவதற்குள் உயிரிழக்கும் வாய்ப்புள்ளது. ஏராளமான உயிர் பலிகளை நாம் எதிர்கொள்ள நேரிடும்' என, ஜெர்மனியின் சுகாதாரத்துறை அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அனைவரும் விரைவில் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தி உள்ளார்.'ஒவ்வொரு 12 நாளுக்கும் தொற்று விகிதம் அதிகரிப்பதால், தற்போதுள்ள கட்டுப்பாடுகள் போதாது' என, ஜெர்மனி தலைவர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்தார்.அண்டை நாடான ஆஸ்திரியாவிலும் சில பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுஉள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X