பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி குழந்தைகளுக்குபோலீசார் விழிப்புணர்வு

Added : நவ 22, 2021
Share
Advertisement
கோவை:கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரி மாணவிகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.கோவை மாவட்டத்தில் குழந்தைகள் வார விழாவை முன்னிட்டு, கடந்த 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை பள்ளி, கல்லுாரி, பெண்கள் பணிபுரியும் இடங்களுக்கு சென்று குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து, 102 இடங்களில் விழிப்புணர்வு

கோவை:கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரி மாணவிகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.கோவை மாவட்டத்தில் குழந்தைகள் வார விழாவை முன்னிட்டு, கடந்த 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை பள்ளி, கல்லுாரி, பெண்கள் பணிபுரியும் இடங்களுக்கு சென்று குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து, 102 இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.நேற்று, மேட்டுப்பாளையம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லுாரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தடுப்பு சட்டம், சக மாணவ, மாணவிகளிடையே ராகிங் செய்வதால் ஏற்படும் விளைவுகள், போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவு உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.கல்வி நிலையங்களில் புகார் பெட்டி வைத்திருக்க வேண்டும். பாலியல் தொந்தரவு குறித்து, மாவட்ட காவல் கட்டுப்பாட்டு 94981 81212, 77081 00100 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்கிற பல்வேறு தகவல்களை மாணவிகளுக்கு எடுத்துரைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X