சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிரியாணி கேட்டு பெண்கள் அடம் 

Added : நவ 22, 2021
Share
Advertisement
கோவை:முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்ட பெண்கள், அ.தி.மு.க., அலுவலகத்தில் வக்கீல்களிடம் உணவு கேட்டனர்.கோவை, வ.உ.சி., பூங்கா மைதானத்தில் நேற்று நடந்த அரசு விழாவில், முதல்வரை வரவேற்கவும் கூட்டத்தில் பங்கேற்கவும், பல்வேறு பகுதிகளில் இருந்து ஆட்கள் பஸ் மற்றும் வேன்களில் அழைத்து வரப்பட்டிருந்தனர்.இதேபோன்று சுந்தராபுரம், காமராஜபுரத்தை சேர்ந்த பெண்களும்

கோவை:முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்ட பெண்கள், அ.தி.மு.க., அலுவலகத்தில் வக்கீல்களிடம் உணவு கேட்டனர்.கோவை, வ.உ.சி., பூங்கா மைதானத்தில் நேற்று நடந்த அரசு விழாவில், முதல்வரை வரவேற்கவும் கூட்டத்தில் பங்கேற்கவும், பல்வேறு பகுதிகளில் இருந்து ஆட்கள் பஸ் மற்றும் வேன்களில் அழைத்து வரப்பட்டிருந்தனர்.இதேபோன்று சுந்தராபுரம், காமராஜபுரத்தை சேர்ந்த பெண்களும் கூட்டத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ஆனால், இவர்களுக்கு மதிய சாப்பாடு வாங்கி தரவில்லை என, கூறப்படுகிறது.இவர்களை அழைத்து வந்த வாகனம் ஹூசூர் ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்தது. வாகனம் அருகே சென்ற பெண்கள் சிலர், அங்கிருந்த அ.தி.மு.க., அலுவலகம் அருகே சென்றனர்.அங்கிருந்த வக்கீல்களிடம் தங்களுக்கு பிரியாணி வாங்கி தருமாறு கேட்டுள்ளனர். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து பல்வேறு தரப்பிலும் பரப்பி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X