தமிழ்நாடு

தமிழக அரசின் பட்ஜெட் மதிப்பீடு ஒரு லட்சம் கோடியை தாண்டி சாதனை

Added : ஆக 06, 2011
Advertisement

சென்னை : புதிய அரசு, மாநிலத்தின் சொந்த வரி வருவாயை உயர்த்தியுள்ளதால், ஒட்டுமொத்த பட்ஜெட் மதிப்பீடு ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.முந்தைய அரசு, கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில், மொத்த வருவாய் வரவுகள், 79 ஆயிரத்து 413 கோடியே 26 லட்ச ரூபாயாகவும், மொத்த வருவாய் செலவு, 78 ஆயிரத்து 974 கோடியே 48 லட்ச ரூபாயாகவும் மதிப்பிட்டிருந்தது.இதனால், வருவாய்உபரியாக, 438 கோடியே 78 லட்ச ரூபாய் காண்பிக்கப்பட்டிருந்தது. நிதிப் பற்றாக்குறையும், 13 ஆயிரத்து 506 கோடி ரூபாயாக இருந்தது.இந்நிலையில், புதிய அரசு தாக்கல் செய்த திருத்தப்பட்ட பட்ஜெட்டில், 8,900 கோடி ரூபாய்க்கு, புதிய திட்டங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள திட்டங்களின் பயன்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதை ஈடுகட்ட, வரி வருவாயை அரசு அதிகரித்துள்ளது.இதன் காரணமாகவே, மொத்த வருவாய்வரவுகள், 85 ஆயிரத்து 685 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இதில், மாநில அரசின் சொந்த வரி வருவாய்மட்டும், 59 ஆயிரத்து 787 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. வரி அல்லாத வருவாயும், 5,015 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.இதனால் தான், வருவாய் செலவினம், 85 ஆயிரத்து 511 கோடியாக உயர்ந்து, வருவாய் உபரி, 173 கோடியானது.மூலதன திட்டங்களுக்கான நிதி, 15 ஆயிரத்து 877 கோடி ரூபாயையும் சேர்க்கும்போது, பட்ஜெட் மொத்த மதிப்பீடு, ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.


நமது சிறப்பு நிருபர்


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X