பொது செய்தி

இந்தியா

தாஜ்மஹால் வடிவில் வீடு: மனைவிக்காக கட்டிய கணவர்

Updated : நவ 23, 2021 | Added : நவ 23, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புர்ஹான்பூர் :மத்திய பிரதேசத்தின் புர்ஹான்பூரில் மனைவிக்காக தாஜ்மஹால் வடிவில் ஒருவர் வீடு கட்டியுள்ளார்.ம.பி.,யின் புர்ஹான்பூரில் வசிப்பவர் ஆனந்த் பிரகாஷ் சோக்சி.இவரது மனைவி மஞ்சு ஷா. இவர், தன் கணவரிடம், 'எனக்காக என்னசெய்வீர்கள்' என,கேட்டுள்ளார். இதையடுத்து தன் மனைவிக்காக உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹால் வடிவில் வீடு கட்ட முடிவு செய்தார், ஆனந்த். இதற்காக அவர்
தாஜ்மஹால், வீடு, மனைவி,  கணவர்

புர்ஹான்பூர் :மத்திய பிரதேசத்தின் புர்ஹான்பூரில் மனைவிக்காக தாஜ்மஹால் வடிவில் ஒருவர் வீடு கட்டியுள்ளார்.ம.பி.,யின் புர்ஹான்பூரில் வசிப்பவர் ஆனந்த் பிரகாஷ் சோக்சி.

இவரது மனைவி மஞ்சு ஷா. இவர், தன் கணவரிடம், 'எனக்காக என்னசெய்வீர்கள்' என,கேட்டுள்ளார். இதையடுத்து தன் மனைவிக்காக உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹால் வடிவில் வீடு கட்ட முடிவு செய்தார், ஆனந்த். இதற்காக அவர் ஏற்பாடு செய்த இன்ஜினியர் ஆக்ரா சென்று தாஜ்மஹாலை மிக கவனமாக கண்காணித்தார். அதன் வடிவமைப்பு, பளிங்கு கற்கள், கலைநயம் உள்ளிட்டவற்றை பதிவு செய்தார்.பின் புர்ஹான்பூரில் தாஜ்மஹால் வடிவிலான வீட்டை அமைக்கும் பணி துவங்கி மூன்று ஆண்டுகளில் முடிவிற்கு வந்துள்ளது.

வீட்டின் குவிமாடம் 29 அடி உயரத்தில் தாஜ்மஹால் போல் கோபுரங்களுடன் அமைந்துள்ளது. தரையில் ராஜஸ்தானின் மக்ரானாவில் இருந்து கொண்டு வந்த வெள்ளை மார்பிள் பதிக்கப்பட்டு உள்ளது. இருளில் ஜொலிக்கும் வகையில் உள்ளேயும், வெளியேயும் விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன.மனைவிக்காகதாஜ்மஹால் வடிவில் வீடு கட்டியஆனந்துக்கு பாராட்டுகள் குவிகின்றன.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
23-நவ-202121:11:38 IST Report Abuse
sankar பலமனைவிகளில் ஒரு மனைவிக்காக ஒரு பைத்தியக்காரன் கட்டிய சமாதி - அதற்குப்பிறகும் அந்த மனைவியின் தமக்கையை மணந்துகொண்டு விசித்திரக்காதல் - அது காவியம் என்று பீலா வேறு - அதை போயி உன் மனைவிக்கு கட்டி இருக்கியே - சந்தேகம் வரப்போகுது தம்பி
Rate this:
Cancel
Yesappa - Bangalore,இந்தியா
23-நவ-202121:04:48 IST Report Abuse
Yesappa தாஜ் மஹால் கட்டிய ஷாஜஹான்க்கு மும்தாஜ் பல மநைவியரில் ஒருவர். பின்பு இவன் அவளது தங்கையும் கல்யாணம் செய்தான் . ஆனால் இது காதல் சின்னமாம் ..மஞ்சு ஷா மேடம் , உங்க வீட்டுக்காரரையும் நல்ல வாட்ச் பண்ணுங்க
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
23-நவ-202117:31:45 IST Report Abuse
Samathuvan Brother, please register your family belong to RSS party otherwise you will will be ed.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X