உதவித் தொகை: முதியோர் மகிழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உதவித் தொகை: முதியோர் மகிழ்ச்சி

Added : நவ 23, 2021
Share
அன்னுார்:ஒரே நாளில், 506 பேருக்கு முதியோர் உதவித் தொகைக்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.அன்னுார் தாலுகாவில், மூன்று பேரூராட்சிகள், 28 ஊராட்சிகள் உள்ளன. 2.25 லட்சம் பேர் வசிக்கின்றனர்.தாலுகாவில் ஏற்கனவே, 7,800 பேர் முதியோர் உதவித் தொகையாக மாதம், 1,000 ரூபாய் பெற்று வருகின்றனர். இந்நிலையில், மேலும், 2,000 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.நேற்று கோவையில் நடந்த நிகழ்ச்சியில் அன்னுார்
 உதவித் தொகை: முதியோர் மகிழ்ச்சி

அன்னுார்:ஒரே நாளில், 506 பேருக்கு முதியோர் உதவித் தொகைக்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.அன்னுார் தாலுகாவில், மூன்று பேரூராட்சிகள், 28 ஊராட்சிகள் உள்ளன. 2.25 லட்சம் பேர் வசிக்கின்றனர்.தாலுகாவில் ஏற்கனவே, 7,800 பேர் முதியோர் உதவித் தொகையாக மாதம், 1,000 ரூபாய் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், மேலும், 2,000 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.நேற்று கோவையில் நடந்த நிகழ்ச்சியில் அன்னுார் தாலுகாவில் விண்ணப்பித்தவர்களில், 506 பேருக்கு முதியோர் உதவித் தொகைக்கான உத்தரவு வழங்கப்பட்டது. இத்துடன், அன்னுார் ஒன்றியத்தைச் சேர்ந்த, 78 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, வங்கி கடனாக, ஒரு கோடியே 88 லட்சம் ரூபாய்க்கான உத்தரவு வழங்கப்பட்டது.வெள்ளானைப்பட்டி மற்றும் எஸ்.எஸ். குளம் வருவாய் கிராமங்களை சேர்ந்த 48 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டது. முதியோர் உதவித் தொகைக்காக விண்ணப்பித்து, பல ஆண்டுகளாக காத்திருந்த விண்ணப்பதாரர்கள் உத்தரவு கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X