பொது செய்தி

தமிழ்நாடு

புதுப்பொலிவு பெற்ற குளம் : பரிசல் பயணத்தில் மகிழ்ச்சி

Added : நவ 23, 2021
Share
Advertisement
கோவில்பாளையம்:மழை நீர் நிரம்பிய ஒட்டன் குட்டையில் பரிசல் பயணம் நடந்தது.சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தில், 125 ஏக்கர் பரப்பளவுள்ள காலிங்கராயன் குளம் உள்ளது. இந்தக் குளத்தில் காலிங்கராயன் குளம் பாதுகாப்பு அமைப்பு சார்பில், 22 மாதங்களாக சீரமைப்பு பணி நடந்து வருகிறது. 30 சதவீதம் அளவுக்கு மழை நீர் தற்போது தேங்கி உள்ளது.குளத்துக்கு நீர் வரும் பிரதான குளமாக கீரணத்தம் ஒட்டன்
 புதுப்பொலிவு பெற்ற குளம் : பரிசல் பயணத்தில் மகிழ்ச்சி

கோவில்பாளையம்:மழை நீர் நிரம்பிய ஒட்டன் குட்டையில் பரிசல் பயணம் நடந்தது.சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தில், 125 ஏக்கர் பரப்பளவுள்ள காலிங்கராயன் குளம் உள்ளது. இந்தக் குளத்தில் காலிங்கராயன் குளம் பாதுகாப்பு அமைப்பு சார்பில், 22 மாதங்களாக சீரமைப்பு பணி நடந்து வருகிறது. 30 சதவீதம் அளவுக்கு மழை நீர் தற்போது தேங்கி உள்ளது.
குளத்துக்கு நீர் வரும் பிரதான குளமாக கீரணத்தம் ஒட்டன் குட்டை உள்ளது. 16 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த குட்டையில் மழைநீர் முழுவதும் நிரம்பியுள்ளது. 17 ஆண்டுகளுக்கு பின், மழைநீர் முழுவதுமாக நிரம்பி உள்ளது.கடந்த, 22 மாதங்களாக குளம் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
பொதுமக்களுக்கு குளம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, ஒட்டன்குட்டையில் பரிசல் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் மாலை குளத்தில் தன்னார்வலர்கள் பரிசலில் பயணம் சென்றனர். 'காலிங்கராயன் குளம் மற்றும் ஒட்டன்குட்டையில் சீரமைப்பு பணியில் உதவ அனைவரும் முன்வர வேண்டும்' என, தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X