விழாவுக்கு சென்றன பஸ்கள்: காத்திருந்த பயணிகள் அவதி

Added : நவ 23, 2021
Share
Advertisement
அன்னுார்:கோவை வழித்தடத்தில் தனியார் பஸ்கள் இயங்காததால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.கோவையில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற விழா, நேற்று வ.உ.சி., மைதானத்தில் நடந்தது. இந்த விழாவுக்காக, பயனாளிகள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களை அழைத்துச் செல்ல, கோவை --- சத்தி வழித்தடத்தில் இயங்கும் தனியார் பஸ்கள் அரசியல் கட்சி மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகளால் கோவைக்கு
 விழாவுக்கு சென்றன பஸ்கள்: காத்திருந்த பயணிகள் அவதி

அன்னுார்:கோவை வழித்தடத்தில் தனியார் பஸ்கள் இயங்காததால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.கோவையில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற விழா, நேற்று வ.உ.சி., மைதானத்தில் நடந்தது. இந்த விழாவுக்காக, பயனாளிகள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களை அழைத்துச் செல்ல, கோவை --- சத்தி வழித்தடத்தில் இயங்கும் தனியார் பஸ்கள் அரசியல் கட்சி மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகளால் கோவைக்கு இயக்கப்பட்டன.இதனால், நேற்று காலை 5:30 மணி முதல் சத்தியில் இருந்து வர வேண்டிய தனியார் பஸ்கள் அன்னுாருக்கு வரவில்லை. கோவை- - சத்தி வழித்தடத்தில் இயங்கவில்லை.பயணிகள் கூறுகையில், 'கோவையில் இருந்து சத்திக்கு, 25 அரசு பஸ்களும், 21 தனியார் பஸ்களும் இயங்கி வந்தன. முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சிக்காக, 21 தனியார் பஸ்களில் 19 தனியார் பஸ்கள் திருப்பி விடப்பட்டன. பள்ளி கல்லுாரிக்கு செல்வோர், வேலைக்கு செல்வோர் என பலரும், அரசு பஸ்சில் மட்டுமே ஏற வேண்டியிருந்தது. கொரோனா அபாயம் இன்னும் நீங்காத நிலையில் ஒவ்வொரு பஸ்சிலும், 100 முதல் 110 பயணிகள் ஏற்றப்பட்டனர்' என்றனர்.சத்தியில் இருந்து அன்னுார் வழியாக கோவை சென்ற பஸ்கள் அனைத்திலும், நேற்று காலை படிக்கட்டில் தொங்கியபடி பயணிகள் பயணம் மேற்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X