கம்யூனிஸ்ட் ஆதரவு அமைப்புகள் வசம் சிக்குகிறதா இல்லம் தேடி கல்வி திட்டம்; தன்னார்வலர்கள் தேர்விலும் தன்னிச்சை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கம்யூனிஸ்ட் ஆதரவு அமைப்புகள் வசம் சிக்குகிறதா இல்லம் தேடி கல்வி திட்டம்; தன்னார்வலர்கள் தேர்விலும் தன்னிச்சை

Added : நவ 23, 2021
Share
தமிழகத்தில் கொரோனாவால் ஏற்பட்ட மாணவர்களின் கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்காக துவங்கவுள்ள இல்லம் தேடி கல்வித் திட்டத்தில், கம்யூனிஸ்ட் ஆதரவு அமைப்பு நிர்வாகிகள், ஆசிரியர்கள் ஆதிக்கம் செலுத்துவதாக சர்ச்சை எழுந்துள்ளது.இத்திட்டம் 12 மாவட்டங்களில் முதற்கட்டமாக துவக்கப்படவுள்ளது. தினம்மாலை 5:00 - 7:00 மணி வரை மாணவர்


தமிழகத்தில் கொரோனாவால் ஏற்பட்ட மாணவர்களின் கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்காக துவங்கவுள்ள இல்லம் தேடி கல்வித் திட்டத்தில், கம்யூனிஸ்ட் ஆதரவு அமைப்பு நிர்வாகிகள், ஆசிரியர்கள் ஆதிக்கம் செலுத்துவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இத்திட்டம் 12 மாவட்டங்களில் முதற்கட்டமாக துவக்கப்படவுள்ளது. தினம்மாலை 5:00 - 7:00 மணி வரை மாணவர் இருப்பிடங்களுக்கே சென்று ஆடிப்பாடி செயல்பாடுகளுடன் கூடிய கல்வியளிக்க கருத்தாளர்களுக்குபயிற்சிஅளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக அரசு ரூ.200 கோடி ஒதுக்கியுள்ளது.தற்போது மாநில அளவில் தன்னார்வலர்கள் தேர்வு நடந்து வருகிறது.

பொறியியல், பி.எச்.டி., எம்.பில்., பி.ஜி., பட்டப் படிப்பு முடித்தோர் உட்பட 2 லட்சத்திற்கும் மேல் பேர் பதிவு செய்துள்ளனர்.தன்னார்வலர்தேர்வில் ஆர்.எஸ்.எஸ்., சார்ந்த அமைப்பினர் தேர்வு செய்யப்படவுள்ளதாக ஆரம்பத்தில் அரசியல் கட்சிகள்சர்ச்சையை கிளப்பின. அப்போது "முழு பின்னணியை விசாரித்த பின்னர் தான் இத்திட்டத்திற்கான தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்படுவர்" என மதுரையில் கல்வி அமைச்சர் மகேஷ் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கும் மாநில, மாவட்ட கருத்தாளர்கள், விழிப்புணர்வு ஏற்படுத்தும் அமைப்புகள் பெரும்பாலும் கம்யூனிசசித்தாந்த பின்னணிகொண்டவை. இதை கல்வி அதிகாரிகள் எவ்வாறு அனுமதிக்கலாம் என கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.அவர்கள் கூறியதாவது:இத்திட்டம் துவக்கும்போதுமத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றது என சர்ச்சை எழுந்தது.

ஆர்.எஸ்.எஸ்., மற்றும் சங்பரிவார் அமைப்புகள் தன்னார்வலர்களாக வந்து விடுவர் என வேண்டுமென்றே சிலர் வதந்தி பரப்பினர். அதுபோல் எதுவும் நடக்கவில்லை.ஆனால் தற்போது தன்னார்வலர்களை தேர்வு செய்யும் முழு பொறுப்பும் கம்யூனிச சிந்தாந்தம் கொண்ட அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கருத்தாளர்கள் என்ற பெயரில் இந்த அமைப்புகளின் ஆசிரியர்களே அதிகம் இடம் பெற்றுள்ளனர்.

இதுதவிர இத்திட்டம் தொடர்பாக கிராமம் கிராமமாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது வரை களம் இறங்கியுள்ள அமைப்புகளும் கம்யூனிச கொள்கையாளர்களே. கல்வியில் 'காவி' வேண்டாம் என்றால் 'கம்யூனிசத்தையும்' தமிழக அரசு புகுத்த கூடாது, என்றனர்.

-- நமது நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X