அன்னுார்:ரேஷன் அரிசி கடத்தல் கும்பலைப் பிடித்த அன்னுார் போலீசாருக்கு, எஸ்.பி., நற்பணி சான்று வழங்கினார்.அன்னுார் அருகே காக்காபாளையத்தில், ஒரு குடோனில், ஒரு கும்பல் டன் கணக்கில் ரேஷன் அரிசியை கடத்தி வந்து, மாவாக அரைத்தும் ரேஷன் அரிசி ஆகவும், கேரளா மற்றும் கர்நாடகாவுக்கு கடத்துவதாக போலீசாருக்கு தெரியவந்தது.
கடந்த வாரம் அன்னுார் போலீசார் அங்கு சோதனை நடத்தி, பதுக்கி வைத்திருந்த 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 17 டன் ரேஷன் அரிசியை கைப்பற்றினர். கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தனர். உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம், ரேஷன் அரிசியையும், லாரியையும் ஒப்படைத்தனர். கோவை ரூரல் எஸ்.பி., செல்வ நாகரத்தினம், எஸ்.பி., அலுவலகத்தில் அன்னூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா, முதல்நிலை தனிப்பிரிவு காவலர் கருணாகரன், இரண்டாம் நிலை காவலர் வெங்கடேஷ் ஆகியோருக்கு நற்பணி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE