பொது செய்தி

தமிழ்நாடு

நீர் அலைகள் ததும்பும் ஆச்சான் குளம் : கண்ணுக்கு குளிர்ச்சி; விவசாயிகள் மகிழ்ச்சி

Added : நவ 23, 2021
Share
Advertisement
சூலுார்:தொடர் மழையின் காரணமாக, நீர் வரத்து அதிகரித்ததால், ஆச்சான் குளம் நிரம்பி வழிகிறது.சூலுார் அடுத்த நீலம்பூர் ஆச்சான் குளம், 400 ஏக்கர் பரப்புள்ளது. நொய்யல் ஆற்றில் இருந்து மழைநீர் திருப்பி விடப்பட்டு, இருகூர், ராவத்துார் வழியாக இந்த குளத்துக்கு நீர் வரும். கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்ததால், சூலுார் வட்டாரத்தில் உள்ள பல குளங்களுக்கு மழைநீர் திருப்பி
 நீர் அலைகள் ததும்பும் ஆச்சான் குளம் : கண்ணுக்கு குளிர்ச்சி; விவசாயிகள் மகிழ்ச்சி

சூலுார்:தொடர் மழையின் காரணமாக, நீர் வரத்து அதிகரித்ததால், ஆச்சான் குளம் நிரம்பி வழிகிறது.சூலுார் அடுத்த நீலம்பூர் ஆச்சான் குளம், 400 ஏக்கர் பரப்புள்ளது. நொய்யல் ஆற்றில் இருந்து மழைநீர் திருப்பி விடப்பட்டு, இருகூர், ராவத்துார் வழியாக இந்த குளத்துக்கு நீர் வரும். கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்ததால், சூலுார் வட்டாரத்தில் உள்ள பல குளங்களுக்கு மழைநீர் திருப்பி விடப்பட்டது. ஆனால், ஆச்சான் குளத்துக்கு மழைநீர் திருப்பி விடப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக மற்ற பகுதிகளில் பெய்த மழையால், ஆச்சான் குளத்துக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால், குளம் நிரம்பி வழிகிறது. வழிந்தோடும் மழைநீர், வழியோர கிராமங்கள் வழியாக வாய்க்காலில் ஓடி, மற்ற குளங்களுக்கு செல்கிறது. இதனால், சுற்றுவட்டார விவசாயிகள் மற்றும் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X