தமிழ்நாடு

டோல்கேட் வசூலுக்கு தடை கோரி வழக்கு; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Added : நவ 23, 2021
Share
Advertisement
மதுரை : நாகர்கோவில்-மதுரை இடையே நான்குவழிச்சாலை பராமரிப்புப் பணி முடிவடையும்வரை டோல்கேட் கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.திருநெல்வேலி வழக்கறிஞர் கோவிந்த் தாக்கல் செய்த பொதுநல மனு: நாகர்கோவில்-மதுரை நான்குழிச்சாலை மோசமாக உள்ளது. விபத்து, வாகன நெரிசல் ஏற்படுகிறது. மாற்றுவழியில்


மதுரை : நாகர்கோவில்-மதுரை இடையே நான்குவழிச்சாலை பராமரிப்புப் பணி முடிவடையும்வரை டோல்கேட் கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

திருநெல்வேலி வழக்கறிஞர் கோவிந்த் தாக்கல் செய்த பொதுநல மனு: நாகர்கோவில்-மதுரை நான்குழிச்சாலை மோசமாக உள்ளது. விபத்து, வாகன நெரிசல் ஏற்படுகிறது. மாற்றுவழியில் ஒருவழிப்பாதையில் வாகனங்களை திருப்பிவிடுகின்றனர். சாலையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.எச்.ஏ.ஐ.,) முறையாக பராமரிக்கவில்லை. சென்னை மற்றும் நகர்ப்புறங்களில் சாலைகளை சீரமைக்கும்வரை டோல்கேட் கட்டணம் வசூல் நிறுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

மக்கள் நலன் கருதி மாநில அரசு அம்முடிவு எடுத்துள்ளது.நாகர்கோவில்-மதுரை இடையே நான்குவழிச்சாலை பராமரிப்பு பணி முடியுவடையும்வரை அவ்வழித்தடத்திலுள்ள டோல்கேட்டுகளில் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு கோவிந்த் மனு செய்தார். நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, பி.வேல்முருகன் அமர்வு என்.எச்.ஏ.ஐ., தலைவர், மதுரை மண்டல அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு 2 வாரங்கள் ஒத்திவைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X