தமிழ்நாடு

அணுசக்தி மணல் திருட்டு: சி.பி.சி.ஐ.டி., விசாரணை; உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : நவ 23, 2021
Share
Advertisement
மதுரை : துாத்துக்குடி தாமிரபரணியில் சட்டவிரோதமாக அணுசக்தி மணல் எடுக்கப்பட்டது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தர விட்டது. துாத்துக்குடி அகரம் பாலகிருஷ்ணன், 'தாமிரபரணி ஆற்றின் அருகே வல்லநாடு அகரம் குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக மணல் குவாரி நடக்கிறது. தடுக்க நடவடிக்கை எடுக்க துாத்துக்குடி கலெக்டர், எஸ்.பி.,க்கு உத்தரவிட


மதுரை : துாத்துக்குடி தாமிரபரணியில் சட்டவிரோதமாக அணுசக்தி மணல் எடுக்கப்பட்டது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தர விட்டது.

துாத்துக்குடி அகரம் பாலகிருஷ்ணன், 'தாமிரபரணி ஆற்றின் அருகே வல்லநாடு அகரம் குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக மணல் குவாரி நடக்கிறது. தடுக்க நடவடிக்கை எடுக்க துாத்துக்குடி கலெக்டர், எஸ்.பி.,க்கு உத்தரவிட வேண்டும்,' என மனு செய்தார். நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், பி.புகழேந்தி அமர்வு: குறிப்பிட்ட அளவு மணல் எடுக்கப்பட்டுள்ளது;

தாமிரபரணி ஆற்றில் அணுசக்திக்கான கனிமங்கள் உள்ளன என வழக்கறிஞர் கமிஷனர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தார். அம்மணலில் அணுசக்திக்கான கார்னைட், இலுமினைட், மோனோசைட், ரூட்டைல், சிலுமினைட் கனிமங்கள் அடங்கியுள்ளதாக மத்திய அரசுத் தரப்பு அறிக்கை தாக்கல் செய்தது. அதில் எத்தனை சதவீதம் கனிமங்கள் உள்ளன, அதன் பயன்பாடு குறித்து விரிவாக ஆய்வு செய்ய மத்திய அரசுத் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.

2022 அக்டோபருக்குள் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மணல் திருட்டு குறித்து முறப்பநாடு போலீசில் பதிவான வழக்குகளின் விசாரணை சி.பி.சி.ஐ.டி., போலீசுக்கு மாற்றப்படுகிறது. எவ்வளவு மணல் எடுக்கப்பட்டுள்ளது, சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டதா, எங்கெங்கு கொண்டு செல்லப்பட்டது என டி.எஸ்.பி., அந்தஸ்திலான அதிகாரி விசாரிக்க வேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X