திருப்பூர்: ''திருப்பூர் மாவட்டம் என்பது, தொழில் வளம் மிகுந்த மாவட்டம்; குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் களஞ்சியமாக விளங்குகிறது,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்
.தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழா, சிக்கண்ணா கல்லுாரி மைதானத்தில் நேற்று நடந்தது. முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல்நாட்டி, 4,335 பயனாளிகளுக்கு, 55.65 கோடி ரூபாய் மதிப்பிலான நல உதவி வழங்கினார்.முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:தொழில்துறையினர், பெண்கள், முதியோர் என, பலதரப்பட்ட மக்களுக்கும் நல உதவி வழங்கியுள்ளோம். தி.மு.க., ஆட்சி அமைந்த போது, மக்களால் ஆட்சி என்னிடம் அமைக்கப்பட்டது. தமிழகத்தில் நடப்பது, தி.மு.க., அரசாக இருக்காது; தமிழ் இனத்தில் அரசாக வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது. கடந்த அ.தி.மு.க., ஆட்சி குறித்து பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.ரூ.100 கோடி ஒதுக்கீடுதிருப்பூர் மாவட்டம் என்பது, தொழில் வளம் மிகுந்த மாவட்டம்; குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் களஞ்சியமாக விளங்குகிறது. கொரோனா காலத்தில் பலவகையில், வளர்ச்சிக்காக நடவடிக்கை எடுத்தோம்.
குறிப்பாக, 2,239 சிறு, குறு நிறுவனங்களுக்கு, 179.19 கோடி ரூபாய் முதலீட்டு மானிமாக வழங்கியுள்ளோம். உத்திரவாத கடன் திட்டத்துக்கு, 100 கோடி ரூபாய் ஒதுக்கி, விரைவில் செயல்பட துவங்கும்.உழைக்கஉத்தரவிடுங்கள்!ஐந்து மாதங்கள் மட்டுமல்ல, ஐந்து ஆண்டுகளுக்கும், இப்படித்தான் ஆட்சி நடத்துவோம்; மக்களுக்காக பணியாற்றுவோம். பாட்டாளி, உழவர்கள், பெண்கள், திருநங்கையர், மாணவியர் என, அனைவரின் பிரதிநிதியாக முதல்வர் இருக்கையில் இருக்கிறேன். உங்களில் ஒருவராக இருந்து ஆட்சி நடத்துகிறேன். இவ்வாறு, முதல்வர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE