பொது செய்தி

தமிழ்நாடு

காய்கறி விலை கிடு.. கிடு... தக்காளி கிலோ ரூ.130

Added : நவ 23, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகள் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. தக்காளி கிலோ 130, கத்தரிக்காய் 120 ரூபாய்க்கு விற்கப்படுவதால் சாதாரண, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக காய்கறிகளின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக தக்காளி விலை தகிக்கிறது. தொடர்ந்து ரூ.100க்கும் மேல்
 காய்கறி விலை கிடு.. கிடு...  தக்காளி கிலோ ரூ.130


ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகள் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. தக்காளி கிலோ 130, கத்தரிக்காய் 120 ரூபாய்க்கு விற்கப்படுவதால் சாதாரண, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக காய்கறிகளின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக தக்காளி விலை தகிக்கிறது. தொடர்ந்து ரூ.100க்கும் மேல் விற்கப்படுகிறது. நேற்று சில்லரை காய்கறி கடைகளில் ரூ.130க்கு விற்கப்பட்டது.இதே போல் கத்தரிக்காய் கிலோ ரூ.120, அவரைக்காய்-140, வெண்டைக்காய் -100, சோயாபீன்ஸ் -190, பட்டர் பீன்ஸ்-270, பச்சை பட்டாணி- 210, குடமிளகாய் -180, முருங்கை பீன்ஸ்-120, பீர்க்கன்-80,

பாகற்காய்-70, உருளை-60, பல்லாரி-60, சின்ன வெங்காயம்-60, கேரட் 60, சவ்சவ் 40, என விற்கப்பட்டது.காய்கறிகளின் விலை உயர்வால் மக்கள் தவிக்கின்றனர். குறிப்பாக தக்காளி, கத்தரிக்காய், அவரைக்காய், வெண்டைக்காய் விலை ரூ.100க்கும் அதிகமாகவே தொடர்ந்து விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.அதிகளவு மழையால் காய்கறிகள் விளைச்சலில் ஏற்பட்ட பாதிப்பும், தற்போது கார்த்திகை விரதம் இருப்பவர்களால் தேவை அதிகரித்துள்ளதும் விலை உயர்வுக்கு காரணம், என தெரிய வந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X