பொது செய்தி

தமிழ்நாடு

பந்தல் முறை சாகுபடி தக்காளி அழுகாது: 'அனுபவ' விவசாயி 'பளிச்'

Added : நவ 23, 2021
Share
Advertisement
பல்லடம்:''பந்தல் முறையில் தக்காளி பயிரிட்டால் பாதிப்புகளை குறைத்து, விலை உயர்வை தடுக்க முடியும்'' என, பல்லடம் அருகே விவசாயி ஒருவர் யோசனை வழங்கி உள்ளார்.திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த, சித்தம்பலம் புதுார் கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி, 50; விவசாயி. பந்தல் முறையில் காய்கறி சாகுபடி செய்வதில் கைதேர்ந்தவர். பலத்த மழையிலும் பயிர்கள் சேதம் அடையாத வகையில், பந்தல்
 பந்தல் முறை சாகுபடி தக்காளி அழுகாது: 'அனுபவ' விவசாயி 'பளிச்'

பல்லடம்:''பந்தல் முறையில் தக்காளி பயிரிட்டால் பாதிப்புகளை குறைத்து, விலை உயர்வை தடுக்க முடியும்'' என, பல்லடம் அருகே விவசாயி ஒருவர் யோசனை வழங்கி உள்ளார்.திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த, சித்தம்பலம் புதுார் கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி, 50; விவசாயி. பந்தல் முறையில் காய்கறி சாகுபடி செய்வதில் கைதேர்ந்தவர். பலத்த மழையிலும் பயிர்கள் சேதம் அடையாத வகையில், பந்தல் முறையில் தக்காளி பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளார்.
பழனிசாமி கூறியதாவது:பருவ மழைகளின்போது காய்கறிப் பயிர்கள் சேதமடைவது இயற்கை. இதிலிருந்து பயிர்களை பாதுகாக்க நாம் முயற்சித்தால், நஷ்டத்தில் இருந்து தப்பிவிடலாம். பெரும்பாலான விவசாயிகள், சாதாரண முறையில் தக்காளி நடவு செய்கின்றனர்.இதனால், மழையின்போது தக்காளிகள் அழுகி வீணாகி விடுகின்றன. அவ்வாறு ஏற்பட்ட பாதிப்பு காரணமாகவே, தட்டுப்பாடு ஏற்பட்டு, தக்காளி இன்று கடும் விலை உயர்வை எட்டியுள்ளது. வரும் நாளில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.நான் நீண்ட காலமாக, பந்தல் முறையில் தக்காளி சாகுபடி செய்து வருகிறேன். இதனால், பூ, காய், பழம் என எதுவும் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு இல்லை. ஏக்கருக்கு, 12-, 15 டன் வரை கிடைக்கும். இம்முறையில், ஏக்கருக்கு, 6 ஆயிரம் நாற்றுகள் நட முடியும்.
பந்தல் அமைக்க ஏக்கருக்கு, 25 -- 40 ஆயிரம் ரூபாய் வரை கூடுதல் செலவாகும். செலவைக் கருத்தில் கொண்டு, விவசாயிகள் பந்தல் அமைக்க முன் வருவதில்லை.இதனால், காய்கள் அழுகி நஷ்டத்தை சந்திக்கின்றன. பந்தல் முறையில் தக்காளி சாகுபடி செய்ய விவசாயிகள் முயற்சிக்க வேண்டும்.தமிழக அரசு இதற்கு மானியம் வழங்கி, தக்காளி சாகுபடியை ஊக்குவித்தால், விலை குறைவதுடன் பொதுமக்களுக்கும் குறைந்த விலைக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X