பொது செய்தி

தமிழ்நாடு

கோயில் அறங்காவலர் விண்ணப்பம்; இணையத்தில் வெளியிட வழக்கு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி

Added : நவ 23, 2021
Share
Advertisement
மதுரை : கோயில்களுக்கு அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பிப்போரின் தகுதிகள் குறித்த பிரமாணப் பத்திரங்களை அரசின் இணையதளத்தில் வெளியிட தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.திருநெல்வேலி வழக்கறிஞர் பாலாஜி கிருஷ்ணசாமி தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழக பொதுக் கோயில்களுக்கு 10 ஆண்டுகளாக அறங்காவலர்களை நியமிக்கவில்லை. அறங்காவலர்களை நியமிக்க அறநிலையத்துறை


மதுரை : கோயில்களுக்கு அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பிப்போரின் தகுதிகள் குறித்த பிரமாணப் பத்திரங்களை அரசின் இணையதளத்தில் வெளியிட தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

திருநெல்வேலி வழக்கறிஞர் பாலாஜி கிருஷ்ணசாமி தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழக பொதுக் கோயில்களுக்கு 10 ஆண்டுகளாக அறங்காவலர்களை நியமிக்கவில்லை. அறங்காவலர்களை நியமிக்க அறநிலையத்துறை தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்போரின் தகுதிகளை அறிந்து கொள்ள மக்களுக்கு உரிமை உள்ளது. தகுதிகள், சொத்துக்கள், வழக்கு நிலுவையில் உள்ளதா உள்ளிட்ட விபரங்களை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும். தவறினால் சம்பந்தப்பட்டோரின் விண்ணப்பங்களை அறநிலையத்துறை நிராகரிக்க வேண்டும். விண்ணப்பங்களை அறநிலையத்துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு பாலாஜி கிருஷ்ணசாமி மனு செய்தார். நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, பி.வேல்முருகன் அமர்வு: அறங்காவலர் பதவிக்கான விண்ணப்பத்தில் அனைத்து விபரங்களும் இடம் பெற்றுள்ளன. விண்ணப்பங்கள் தேர்வுக்குழு முன் உள்ளன. அறங்காவலர்களாக தேர்வு செய்யப்படுவோரின் விபரங்களை அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் அனைவரின் விபரங்களையும் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பது தேவையற்றது; சாத்தியமற்றது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X