பொது செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரம் கடலில் கலக்கும் கழிவுநீர்

Added : நவ 23, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் மீன்களை சுத்தம் செய்து வெளியேற்றும் கழிவுநீர் கடலில் கலப்பதால், கடலோரத்தில் வாழும் மீன்கள் உயிர்இழக்கும் அபாயம் உள்ளது.ராமேஸ்வரத்தில் 800 விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கின்றனர். இப்படகில் சிக்கும் கணவாய், நண்டு மீன்களை தரம்பிரித்து பதப்படுத்தி வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்ய ராமேஸ்வரம் துறைமுகம், வேர்க்கோடு கடலோரத்தில்
 ராமேஸ்வரம் கடலில் கலக்கும் கழிவுநீர்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் மீன்களை சுத்தம் செய்து வெளியேற்றும் கழிவுநீர் கடலில் கலப்பதால், கடலோரத்தில் வாழும் மீன்கள் உயிர்இழக்கும் அபாயம் உள்ளது.ராமேஸ்வரத்தில் 800 விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கின்றனர்.

இப்படகில் சிக்கும் கணவாய், நண்டு மீன்களை தரம்பிரித்து பதப்படுத்தி வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்ய ராமேஸ்வரம் துறைமுகம், வேர்க்கோடு கடலோரத்தில் மீன்கம்பெனிகள் உள்ளது. இதன் உரிமையாளர்கள் கணவாய், நண்டு மீன்களை வாங்கி வேக வைத்து தரம் பிரித்து அனுப்புகின்றனர். இந்த மீன்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரை தொட்டியில் சேமிக்காமல், கடலுக்கு நேரடியாக குழாய் பதித்து கலந்து விடுகின்றனர்.

இதனால் ராமேஸ்வரம் கடற்கரை முழுவதும் கடல்நீர் கருப்பு நிறத்தில்மாறி, சுற்றுச்சூழல் பாதிக்கிறது.இதனால் கடலோரத்தில்வாழும் மீன்களுக்கு சுவாச பிரச்னையில் உயிர்இழக்கும் அபாயம் உள்ளது. ஏற்கனவே கடலோரத்தில் வாழும் கிளக்கான் மீன், கிலி மீன், ஊடகம் மீன்கள் சுற்றுச்சூழல் பாதிப்பதால் இடம் பெயரும் நிலையில், முற்றிலும் கடலோர மீன்வளத்தை அழித்து வரும் மீன்கம்பெனி உரிமையாளர்கள் மீது சுற்றுச்சூழல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X