அம்பது லட்சம் கேட்டு அட்ராசிட்டி: அலறுது டாலர் சிட்டி| Dinamalar

அம்பது லட்சம் கேட்டு 'அட்ராசிட்டி': அலறுது 'டாலர் சிட்டி'

Updated : நவ 23, 2021 | Added : நவ 23, 2021
Share
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப வழிபாட்டில் பங்கேற்று சித்ராவும், மித்ராவும், திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் முன், தீபாவளி பண்டிகை நெரிசலை சமாளிக்க அமைக்கப்பட்ட 'வாட்ச் டவர்' கண்ணில் பட, ''இதில், ஒருநாள் கூட கண்காணிச்சது இல்லை. ஒரு ஜூவல்லரிக்காரங்க தான், 'ஸ்பான்சர்' செஞ்சிருக்காங்க. ஒரு வேளை, அவங்க
அம்பது லட்சம் கேட்டு 'அட்ராசிட்டி': அலறுது 'டாலர் சிட்டி'

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப வழிபாட்டில் பங்கேற்று சித்ராவும், மித்ராவும், திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் முன், தீபாவளி பண்டிகை நெரிசலை சமாளிக்க அமைக்கப்பட்ட 'வாட்ச் டவர்' கண்ணில் பட, ''இதில், ஒருநாள் கூட கண்காணிச்சது இல்லை. ஒரு ஜூவல்லரிக்காரங்க தான், 'ஸ்பான்சர்' செஞ்சிருக்காங்க. ஒரு வேளை, அவங்க விளம்பரத்துக்காக தான், 'வாட்ச் டவரே' போட்டிருப்பாங்களோ'' என்றாள் சித்ரா.

''ஏங்க்கா, போலீஸ் ஸ்டேஷன்கள்ல நன்கொடையாளர்கள் மூலமா, பெயர் பலகை கூட வைக்க கூடாதுன்னு, டி.ஜி.பி., ஆர்டர் போட்டும் கூட, இப்படி பண்ணாறாங்க...''

''சி.எம்., வர்றதா தகவல் வந்த உடனேயே, அதிகாரிங்க ஆளா பறந்து வேலை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க,'' என, அடுத்த மேட்டருக்கு தாவிய சித்ரா, ''அவிநாசி பக்கத்தில இருக்கிற, தொழில்துறை கட்டடத்துல தான், நிகழ்ச்சியை நடத்தறதா முடிவு பண்ணினாங்க,''

''ஆனா, கூட்டத்த சமாளிக்கிற அளவுக்கு அங்க இடமில்ல; சி.எம்.,க்கு பாதுகாப்பு தர்றதுலேயும் சில சிக்கல் இருக்குன்னு சொல்லி, 'அவாய்ட்' பண்ணிட்டு, சிக்கண்ணா காலேஜ்க்கு மாத்திட்டாங்களாம்,'' என்றார்.


தேடிப்பிடித்த அதிகாரிகள்


உடனே மித்ரா, ''அக்கா, அதே மாதிரி, சி.எம்., விசிட் திடீர் ஏற்பாடு பண்ணதால, பயனாளிகள் பட்டியலை தயாரிக்க, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிங்க, படாதபாடு பட்டுட்டாங்க. அடுக்குமாடி வீடு, மகளிர் சுய உதவிக்குழுவினர், 'ஸ்மார்ட் ரேஷன் கார்டு' வாங்க காத்திருக்கிற பயனாளிகளையெல்லாம் தேடிப்பிடிச்சு, பட்டியல் ரெடி பண்ணாங்களாம்...'' என்றாள்.

''சி.எம்., குமார் நகர் பக்கத்துல இருக்கிற ஒருவர் வீட்டுக்கு, 'லன்ச்' சாப்பிட, சி.எம்., போறார்ன்னு தகவல் தெரிஞ்சும், அடுத்த நிமிஷமே, அப்பகுதியில இருந்த பல்லாங்குழி ரோட்டை, 'பளிச்'சுன்னு ஆக்கிட்டாங்க. அதுவும் ஒரே ராத்திரில. இதேமாதிரி மத்த ரோட்டையும் மாத்துன்னா நல்லாயிருக்கும் பலரும் பேசறாங்க...'' மித்து படபடவென சொன்னாள்.


தேர்தல் ஜூரம் அடிக்குது...


''சரி விடு மித்து, டாலர் சிட்டிக்குள்ள, அந்த ரோடாச்சும் ஜொலிக்கட்டும்,'' என்ற சித்ரா ''எலக்ஷன் அறிவிக்கப்போற சமயத்துல, சி.எம்., வந்து போனதால, அ.தி.மு.க.,காரங்க கொஞ்சம் 'ஷாக்' ஆகிட்டாங்க,'' என அரசியல் மேட்டருக்கு தாவினாள்.

''இந்த தடவ கார்ப்ரேஷன் எலக்ஷன்ல, எப்படியும் ஜெயிச்சே ஆகணும்னு, கட்சியோட மா.செ.,வாக இருக்கற பொள்ளாச்சிக்காரரு சொல்லிட்டாராம். அதுக்காக, மாசத்துக்கு ரெண்டு தடவ, கூட்டம் போடறாரு. கூட்டத்துல, நிர்வாகிகளோட பேர தனித்தனியாக சொல்லி, 'அசைன்மென்ட்' போடறாராம். உடனே, நிர்வாகிகளும் 'உள்ளேன் ஐயா'ன்னு, கையை துாக்கி, நிக்கறாங்களாம். கூட்டத்துக்கு வராதவங்களுக்கு, 'சீட்' கிடைக்காதுன்னு, வெளிப்படையா சொன்னதால, நிர்வாகிங்க எல்லாரும், தவறாம ஆஜராகிடறாங்க,''


'நோட்டு' போட்டு வசூல்!''தீபவாளிக்கு, நோட்டு போட்டு வசூல் பண்ண விவகாரம், இப்பதான் சூடுபிடிச்சுருக்கு'' என, பழைய மேட்டரை கிளறினாள் மித்ரா.

''என்னக்கா சொல்றீங்க'' என, ஆர்வமாய் கேட்டாள் மித்ரா.

''பல்லடத்துக்கு பக்கத்தில, 'பேட்டை' ஸ்டேஷன்ல, தீபாவளி வசூல் அமோகமாம். குறிப்பாக, ஒரு குட்டி ஆபீசர் பல லகரத்த அள்ளி குவிச்சுட்டாராம் மித்து,''

''ம்ம்ம்... என்னக்கா பண்றது. 'நோட்டு' போட்டு வசூல் பண்ற அளவுக்கு ஆயிடுச்சு...'' என மித்ரா சொன்னதும், சாலையேராம் இருந்த, 'குப்புராஜ்' பேன்ஸி என பெயர் கொண்ட கடைக்கு முன் ஸ்கூட்டரை நிறுத்த, இருவரும் சென்று, சில பொருட்கள் வாங்கி புறப்பட்டனர்.

''அதே ஊர்ல நடந்த, இன்னொரு ஒரு வசூல் ராஜா கதையையும் சொல்றேன் கேளுங்க்கா''

''ம்... சொல்லுடி?''

''எதிர்க்கட்சியும், அவங்க பங்காளி கட்சியை சேர்ந்த சிலர்,ஆர்.டி.ஐ., மூலமா, ஒரு கம்பெனி யோட விவரத்தை கேட்டிருக்காங்க. அதுல விதிமீறல் இருக்கறதா சொல்லி, கம்பெனி ஓனர் கிட்ட, 50 லட்சம் ரூபாய் தரணும்னு 'டிமாண்ட்' பண்ணியிருக்காங்க,''

''உடனே, கம்பெனி மேனேஜரு, போலீசில், கம்ப்ளைன்ட் சொல்ல, போலீஸ் அதிகாரி, 'என்கொயரி'யும் நடத்தியிருக்காரு. ஆனா, எதுவுமே நடக்காத மாதிரி, ரெண்டு சைடிலும் 'சைலன்ட்' ஆகிட்டாங்க. 'மணி மேட்டர்'ங்கறதால தான், இவ்வளவு பெரிய விஷயத்தை கூட, 'ரத்தின' சுருக்கமா பஞ்சாயத்து பண்ணி முடிச்சிட்டாங்கன்னு, 'காரணத்தோடு' ஊரெல்லாம் ஒரே பேச்சு,''அப்போது, கோபாலகிருஷ்ணன் என பெயரிட்ட ஒரு லாரி, அதிவேகமாக ஹாரன் சத்தத்துடன் சென்றது.


கேட்பார் யாருமில்லே...உடனே, வண்டியை மெதுவாக ஓட்டிய சித்ரா, ''இவங்கள திருத்தவே முடியாது'' என தலையில் அடித்து கொண்டே, ''ஸ்மார்ட் சிட்டி வேலையில, கொஞ்சம் கூட ஸ்மார்ட் இல்லைங்க அக்கா'' என, புலம்பிய சித்ரா,''ராயபுரத்துல 'ஸ்மார்ட்' ரோடு போட தேர்வு செய்யப்பட்ட இடத்துல, கட்சிக்காரங்களோட கொடி கம்பம் இருந்துச்சு...''

''அதிகாரிங்க சொன்னவுடன், கம்பத்தை எடுத்துட்டாங்க. உடனே, 'ஸ்மார்ட் ரோடு' வேல, மெதுவா நடக்குன்னு, மழைநீர் தேங்கி, கொசு உற்பத்தி அதிகமாயிடுச்சு'னு ஒரு பேனரை தோழர்கள் வச்சிட்டாங்களாம்,''அப்போது, ரோட்டோர குழியில் சிக்கியிருந்த மினி பஸ்சை, 'பொக்லைன்' வாகனத்தை கொண்டு, மீட்டெடுத்து கொண்டிருந்தனர் சிலர்.

அதைப்பார்த்த மித்ரா, ''இப்பெல்லாம் மினி பஸ்காரங்க, அவங்க இஷ்டத்துக்கு வண்டியை ஓட்றாங்க. கொரோனா சமயத்துல கூட்டம் கம்மியா இருந்ததால, அதுக்கு ஏத்த மாதிரி, 'டிரிப்பை' குறைச்சு வண்டி ஓட்டினாங்க,''

''இப்போ 'நார்மல்' ஆனதுக்கு அப்புறமும் அப்படிதான் ஓட் டறாங்க. 'கலெக் ஷன்' ஆகுற சமயத்துல மட்டும் தான் பஸ் ஓட்டறாங்க. மத்த நேரத்துல நிறுத் திடறாங்க. இத, ஆபீசர்களும் கண்டுக்கறதில்லையாம்,'' என்றாள் மித்ரா.


கிணற்றில் போட்ட கல்''போஸ்டர்' ஒட்டிய விவகாரம், கிணத்துல போட்ட கல்லாட்டம் கிடக்குது,'' என அடுத்த மேட்டர் பேசிய சித்ரா, ''சிட்டி' டிராபிக் போலீசில், சக போலீஸ்காரர் மேல, சின்ன ஆபீசர் ஒருத்தரு, அவதுாறு பரப்பி, 'போஸ்டர்' ஒட்டி வச்சாருல்ல,''

''அந்த போலீஸ்காரரையும், நோட்டீஸ் ஒட்ட வைச்ச ஆபீசரையும், ஆயுதப்படைக்கு மாத்திட்டாங்க. அதோட அந்த விவகாரத்தை, கிணத்துல போட்ட கல்லாட்டம் விட்டுட்டாங்க. அதுக்கு என்ன காரணம்னு விசாரிச்சா, 'நோட்டீஸ்' பின்னணியில, ஒரு பெரிய ஆபீசர் இருக்கிறாராம். அதனாலதான், அத அப்படியே விட்டுட்டாங்களாம்...'' என்றாள் சித்ரா.

''அக்கா, வெ.கோவில் ஸ்டேஷன் ஆபீசரை, மூனு மாசம் முன்னாடி 'டிரான்ஸ்பர்' பண்ணிட்டாங்க. அதுக்கப்புறம் யாரையும் நியமிக்காததால, ஸ்டேஷன்ல வேல பாக்குற போலீஸ்காரங்க தான், தனி ராஜாங்கம் நடத்தறாங்களாம். வேல செய்றதை விட, 'கல்லா' கட்டுறதுல தான் குறியா இருக்காங்காளாம்,'' என்றாள் மித்ரா.


மர்மமாக இருக்குது''அப்ப, காற்றுள்ள போதே துாத்திக்கிறாங்க போல'' என, சிரித்த சித்ரா, ''அவிநாசி பக்கம் அடிச்ச மழையில, கருவலுார் ஊராட்சி ஆபீஸ்க்குள்ள இருந்த பல டாக்குமெண்ட்ஸ் நனைஞ்சு, வீணா போயிடுச்சாம்,'' என்றாள்.

''அப்புறம் என்னாச்சுக்கா...'' என்ற மித்ராவின் கேள்விக்கு, ''இப்பதானே 'கிளர்க்'கை கூட 'டிரான்ஸ்பர்' பண்ணாங்க. என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது'' என, பதிலளித்து சிரித்தாள் சித்ரா.

''அக்கா... இதே மாதிரி நெருப்பெரிச்சல் மணியகாரர், தொடர்பு எல்லைக்கு வெளியவே இருக்காராம். இதனால, சான்றிதழ் வாங்க, அவரோட வீட்டுக்கு பதிவு தபால் அனுப்பி பார்த்திருக்காங்க. 'டோர்லாக்'ன்னு ரிப்ளை வருதாம்,'' என்ற மித்ரா, தனது வீட்டில், இறங்கி கொண்டாள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X