போலீஸ் செய்திகள் தொடர்ச்சி...| Dinamalar

போலீஸ் செய்திகள் தொடர்ச்சி...

Added : நவ 23, 2021
Share
வீட்டில் நகை திருட்டுமதுரை: சதாசிவ நகர் கங்காதரன் 55. பீரோ தயாரிக்கும் தொழில் செய்கிறார். இவரது வீட்டில் 10 பவுன் மதிப்புள்ள நகைகள் திருடப்பட்டன. அண்ணாநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.கஞ்சாவுடன் கைதுமதுரை: புதுார் முருகன் 45, வண்டியூர் சுப்பிரமணி 50, மேலஅனுப்பானடி நந்தகுமார் 19. மொத்தம் 200 கிராம் கஞ்சாவுடன் இவர்களை தெப்பக்குளம் போலீசார் கைது செய்தனர்.ரூ.10.34 லட்சம் மோசடிமதுரை:

வீட்டில் நகை திருட்டு

மதுரை: சதாசிவ நகர் கங்காதரன் 55. பீரோ தயாரிக்கும் தொழில் செய்கிறார். இவரது வீட்டில் 10 பவுன் மதிப்புள்ள நகைகள் திருடப்பட்டன. அண்ணாநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

கஞ்சாவுடன் கைதுமதுரை: புதுார் முருகன் 45, வண்டியூர் சுப்பிரமணி 50, மேலஅனுப்பானடி நந்தகுமார் 19. மொத்தம் 200 கிராம் கஞ்சாவுடன் இவர்களை தெப்பக்குளம் போலீசார் கைது செய்தனர்

.ரூ.10.34 லட்சம் மோசடி

மதுரை: வில்லாபுரம் தினேஷ்பாபு 31. இவருக்கு கனடாவில் வேலை வாங்கித்தருவதாக கூறி ராமநாதபுரம் உச்சிப்புளி குருநாதன் 31, மனைவி பானுப்ரியா உட்பட மூவர் ரூ.10.34 லட்சம் பெற்று மோசடி செய்தனர். அவனியாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

ஆடு திருடர்கள் கைதுமதுரை: காதக்கிணறு சதீஷ்குமார், எழும்பூர் பாலசுந்தர். இருவரும் அரும்பனுார் கிருஷ்ணமூர்த்தியின் ஆடு ஒன்றை திருடியதாக ஊமச்சிக்குளம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

கார் மோதி கொத்தனார் பலி

மதுரை: கல்மேடு வீரகுமார் 27. கொத்தனாரான இவர் நேற்றுமுன்தினம் இரவு டூவீலரில் விரகனுார் கோழிமேடு பகுதியில் வந்தபோது கார் மோதி பலியானார்.சகோதரர்களுக்கு 'குண்டாஸ்'மதுரை: திருப்பரங்குன்றம் துர்கா காலனி சகோதரர்கள் சரவணகுமார் 33, கார்த்திக்குமார் 27. இவர்கள் மீது கொலை வழக்கு உள்ளது.

இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.டாஸ்மாக் கடையில்கொள்ளை முயற்சிமேலுார்: கிடாரிப்பட்டி அரசு டாஸ்மாக்கடையில் நேற்று அதிகாலை 3:00 மணிக்கு முகமூடி கொள்ளையர்கள் 7 பேர் 3 டூவீலரில் சென்றனர்.

காவலாளிகள்பொன்னமராவதி 59, பொன்னையன் 60, கண்களை கட்டினர். பின் கடை வெளியில் விளக்கு போட அமைக்கப்பட்ட பிளக்கில் வெல்டிங் மிஷினை பொருத்தி பூட்டை உடைக்க முயன்றனர்.குறைந்தழுத்த மின் சப்ளையால் வெல்டிங் இயந்திரம் இயங்காததால் கொள்ளை முயற்சியை கைவிட்டு தப்பினர். எஸ்.பி., பாஸ்கரன் கடையில் இருந்த சிசி டிவி காட்சிகளை வைத்து விசாரிக்கிறார்.

இதே கடையில் கடந்தாண்டும் கொள்ளை முயற்சி நடந்தது.கார் கண்ணாடியைஉடைத்தவர்கள் கைதுதிருமங்கலம் : பெரிய கடை வீதி அழகுராஜா 31, உசிலம்பட்டி ரோட்டில் மரக்கடை நடத்துகிறார். நேற்று முன் தினம் இரவு கடையை அடைத்து விட்டு காரில் வீட்டிற்கு புறப்பட்டார்.

திருப்பரங்குன்றம் கண்ணன் 29, புளியங்குளம் சசிக்குமார் 20, அவருடன் தகராறில் ஈடுபட்டு, கார் பின் பக்க கண்ணாடியை உடைத்தனர். இருவரையும் போலீசார் கைது செய்தனர்.டூவீலரில் சென்றவர்தவறி விழுந்து பலிதிருமங்கலம்: கரடிக்கல் காமாட்சி 60, எய்ம்ஸ் மருத்துவமனை ரோட்டில் டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) சென்றார்.

நிலை தடுமாறி கீழே விழுந்த காயமுற்றவர் மதுரை அரசு மருத்துவமனையில் இறந்தார். ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.மறியல்; 100 பேர் மீது வழக்குபேரையூர்: பி.முத்துலிங்காபுரத்தில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. இங்கு குடிநீர் தொட்டி கட்ட கோரி 100 க்கும்மேற்பட்டோர் பேரையூர் முக்குசாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.மூதாட்டி கொலையாசோழவந்தான்: கருப்பட்டி மணிமாறன் 25. இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. சோழவந்தானில் வசிக்கிறார். 10 நாட்களுக்கு முன் சிறையிலிருந்து வெளியே வந்தவர், நேற்று முன்தினம் இரவு மார்க்கெட் ரோட்டில் துாங்கிய ஆதரவற்ற மூதாட்டி திருமலை 75, அருகே நின்றார்.

அவ்வழியாக ரோந்து சென்ற போலீசாரை கண்டு தப்ப முயன்றார். அவரை விசாரித்தபோது, போதையில் மூதாட்டியிடம் இருந்த சில்லரையை திருடியது தெரிந்தது. திருமலை இறந்து கிடந்தார். மணிமாறன் தாக்கியதில் இறந்தாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X