சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊதிய பேச்சு துவங்க வலியுறுத்தி உண்ணாவிரதம்

Added : நவ 23, 2021
Share
Advertisement
திருப்பூர்:சம்பள பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டுமென வலியுறுத்தி சி.ஐ.டி.யு., போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்று துவங்கியது.'சம்பள பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும்; 'பேட்டா', 'இன்சென்டிவ்' பிரச்னையை பேசி தீர்க்க வேண்டும். ஓய்வு பெற்றோர் பணப்பலன், அகவிலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீடு தாமதமின்றி வழங்க வேண்டும்; வாரஓய்வு

திருப்பூர்:சம்பள பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டுமென வலியுறுத்தி சி.ஐ.டி.யு., போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்று துவங்கியது.'சம்பள பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும்; 'பேட்டா', 'இன்சென்டிவ்' பிரச்னையை பேசி தீர்க்க வேண்டும். ஓய்வு பெற்றோர் பணப்பலன், அகவிலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீடு தாமதமின்றி வழங்க வேண்டும்; வாரஓய்வு வழங்கிட வேண்டும்,' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் சார்பில், உண்ணாவிரத போராட்டம் நேற்று துவங்கியது.திருப்பூர் பணிமனை -- 2 முன் நடந்த போராட்டத்துக்கு மண்டல உதவி தலைவர் தேவநேசன் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற சங்க பிரதிநிதிகள் அருணகிரிநாதன், சுப்ரமணிமுன்னிலை வகித்தார்.மாவட்ட துணை செயலாளர் பாலன், மண்டல பொது செயலாளர் செல்லத்துரை உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இன்று காலை முதல் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X