அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வரின் மாவட்டம் திருப்பூர்; அமைச்சர் சாமிநாதன் பேச்சு

Added : நவ 23, 2021
Share
Advertisement
திருப்பூர்,:திருப்பூரில் நேற்று நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,கள், எம்.பி.,கள் மற்றும் பலர் பங்கேற்று பேசினர்.செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், ''கொரோனா பாதிப்பை குறைக்கும் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்து, இன்று, மக்கள் நிம்மதியாக வாழும் சூழலை ஏற்படுத்தியுள்ளார். தொழில் வளம் மிகுந்த மாவட்டத்தை, துவக்கி வைத்ததால்,

திருப்பூர்,:திருப்பூரில் நேற்று நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,கள், எம்.பி.,கள் மற்றும் பலர் பங்கேற்று பேசினர்.செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், ''கொரோனா பாதிப்பை குறைக்கும் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்து, இன்று, மக்கள் நிம்மதியாக வாழும் சூழலை ஏற்படுத்தியுள்ளார். தொழில் வளம் மிகுந்த மாவட்டத்தை, துவக்கி வைத்ததால், திருப்பூர் என்பது முதல்வரின் மாவட்டம் என்ற பெருமை பெற்றுள்ளது,'' என்றார்.மக்களின் முதல்வர்''தமிழகத்தின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருக்கிறார். மக்கள் எளிதில் சந்திக்கும் மகத்தான சக்தியாக திகழ்கிறார். தேர்தலுக்கு வந்து சென்றதை காட்டிலும், மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது,'' என்று, எம்.எல்.ஏ., செல்வராஜ் பேசினார்.'நம்பர் 1' முதல்வர்எம்.பி., ராஜா பேசுகையில்,''வெளிநாடுகளுக்கு செல்லும் போது, தமிழக முதல்வரின் பெருமையை அறிய முடிகிறது. ஆறு மாதங்களில், மக்களுக்கான அனைத்து திட்டங்களையும் கொடுத்துள்ளார். 'நம்பர் 1' முதல்வர் என்ற பாராட்டை பெற்றுள்ளார். கோட்டையில் இருந்து மக்களிடம் வந்திருக்கிறீர்கள்; நீண்ட நாட்கள் வாழ்ந்து, மக்களுக்கு பணியாற்ற வேண்டும்,'' என்றார்.கட்சியினர் உற்சாகம்அனுப்பர்பாளையம், குமார் நகர், பி.என்., ரோடு, மில்லர் சந்திப்பு, புஷ்பா சந்திப்பு பகுதிகளில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வரை மத்திய மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏ., செல்வராஜ் தலைமையில் கட்சியினர் திரண்டு வரவேற்றனர்.நகர செயலாளர்கள் தினேஷ்குமார் (வடக்கு), நாகராஜ் (தெற்கு), நல்லுார் செயலாளர் பழனிசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் மணி உட்பட பலர் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.பூரண கும்ப மரியாதைவிழாவில் பங்கேற்க காலேஜ் ரோடு வழியாக முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வாகனங்கள் போலீஸ் பாதுகாப்புடன் சென்றன. காலேஜ் ரோட்டில் உள்ள ஐயப்பன் கோவில் முன்புறம் ஐயப்ப சேவா சங்க நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர்.கோவில் சார்பில் முதல்வருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அதை தொட்டு வணங்கி முதல்வர் பூரண கும்ப மரியாதையை ஏற்று கொண்டார்.அவிநாசியில் வரவேற்புகோவையில் இருந்து, மதியம், 2:25 மணிக்கு அவிநாசிக்கு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு, பைபாஸ் ரோடு - திருப்பூர் சாலை சந்திப்பில், தி.மு.க.,வினர் உற்சாக வரவேற்பு வழங்கினர்.பாண்டு வாத்தியம், தாரை தப்பட்டை முழங்க, கட்சியினர் வரவேற்பு வழங்கினர். கை அசைத்தும், வணக்கம் செலுத்தியும், கட்சியினரின் வரவேற்பை முதல்வர் ஏற்றுக்கொண்டார்.'முட்டுச் சந்தில்'சிக்கிய அமைச்சர்திருப்பூருக்கு வந்த அமைச்சர் முத்துசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் வாகனங்களில் முன்னதாக புறப்பட்டனர். திருப்பூர் எம்.பி., சுப்பராயனின் தாயார் காலமானதால், துக்கம் விசாரிக்க அமைச்சர் முத்துசாமி உள்ளிட்டோர் லட்சுமி நகரில் உள்ள வீட்டுக்கு சென்றனர்.ஆனால், வீடு இருக்கும் இடம் தெரியாமல் அங்குள்ள ஒரு முட்டு சந்துக்குள் இந்த வாகனங்கள் சென்று சிக்கி கொண்டன. அப்பகுதியிலுள்ள ஒரு வீட்டில் துக்க நிகழ்ச்சி ஏற்பட்டு, பந்தல் போட்டு சேர்களில் சிலர் அமர்ந்திருந்தனர். அமைச்சர் சென்று விசாரித்த போது, வீடு மாறியது தெரிந்தது. உடனே, அனைவரும் கிளம்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X