அரசியல் செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி கட்டாயமே: எதிர்த்த வழக்கு தள்ளுபடி

Updated : நவ 24, 2021 | Added : நவ 23, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை :'மாணவர் நலனுக்காக பாதுகாப்புக்காக ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்' என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.சென்னையைச் சேர்ந்த 'அறம்' அறக்கட்டளையின் தலைவர் உமர் பரூக் தாக்கல் செய்த மனு: தமிழக அரசு 2021 ஆகஸ்ட் 21ல் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து அரசு துறைகள் சார்பில் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள்,
தடுப்பூசி கட்டாயமே: எதிர்த்த வழக்கு தள்ளுபடி

சென்னை :'மாணவர் நலனுக்காக பாதுகாப்புக்காக ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்' என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

சென்னையைச் சேர்ந்த 'அறம்' அறக்கட்டளையின் தலைவர் உமர் பரூக் தாக்கல் செய்த மனு:
தமிழக அரசு 2021 ஆகஸ்ட் 21ல் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து அரசு துறைகள் சார்பில் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள், மாணவர்கள் தடுப்பூசி கண்டிப்பாக செலுத்தி இருக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.
ஊழியர்களையும், ஆசிரியர்களையும் தடுப்பூசி செலுத்தும்படி நிர்ப்பந்திக்கின்றனர். தடுப்பூசி செலுத்தினால் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்கப்படுவோம் என அரசால் கூட எந்த உத்தரவாதமும் அளிக்க முடியவில்லை.

தடுப்பூசி செலுத்திக் கொள்வதும், தவிர்த்துக் கொள்வதும் மக்களின் விருப்பம் என்று விட்டு விட வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் பாரம்பரிய மருந்துகளால் குணம்அடைந்துள்ளனர். எனவே தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது. இது குறித்து அரசுக்கு, கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு பொறுப்பு தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய முதல் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் கூறியதாவது: பள்ளிக்கு வர வேண்டும் என்றால் ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். மாணவர்களின் நலன், பாதுகாப்பு கருதப்பட வேண்டும். சொந்த காரணங்களுக்காக தடுப்பூசி செலுத்த விருப்பப்படாத ஆசிரியர்கள் மற்றவர்களின் நலன் கருதி வீட்டில் இருப்பது சிறந்தது.
தடுப்பூசியை இலவசமாக செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழப்புகள் ஏராளம். உலக சுகாதார அமைப்பு இரண்டு தடுப்பூசிகளையும் அங்கீகரித்துள்ளது. இந்த அமைப்பு நிபுணர்களை கொண்டது; குறைத்து மதிப்பிட முடியாது.
மருத்துவ ஆராய்ச்சியில் புதிது புதிதாக கண்டுபிடிப்புகள் வருகின்றன. தடுப்பூசிகளுக்கு மாற்று நாளை கூட வரலாம். பணிகள் தொடர்பான வழக்கு பொது நல வழக்காக வராது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. இதை ஏற்க முடியாது.
இவ்வாறு கூறினர்.வழக்கை வாபஸ் பெற அனுமதிப்பதாகவும் முதல் பெஞ்ச் தெரிவித்தது. இதையடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் கூறியதை தொடர்ந்து தள்ளுபடி செய்து முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Priyan Vadanad - Madurai,இந்தியா
23-நவ-202117:43:21 IST Report Abuse
Priyan Vadanad இப்பதான் கீழ்கண்ட கருத்து தினமலரில் வந்துள்ளது புதுடில்லி : ''கொரோனா தடுப்பூசி இரு 'டோஸ்' செலுத்தியோருக்கு கூடுதலாக 'பூஸ்டர் டோஸ்' போட்டால் நோய் தடுப்பு திறன் அதிகரிக்கும் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை,'' என, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் டைரக்டர் ஜெனரல் டாக்டர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.
Rate this:
Cancel
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
23-நவ-202112:29:17 IST Report Abuse
நக்கீரன் தடுப்பு ஊசி செலுத்தியவர்களுக்கு கொரோனா வராதா என்று கேட்டால் பதில் இல்லை. இன்றைக்கு பாரம்பரிய மருந்துகள் மூலம் நிறைய பேர் குணமடைந்து உள்ளனர். தடுப்பு ஊசி செலுத்திய நிறைய பேர் இறந்தும் உள்ளனர். தடுப்பு ஊசி சிலருக்கு ஏற்றுக்கொள்வதில்லை, அப்படியெனில் அவர்கள் எல்லாம் தடுப்பு ஊசி செலுத்தி இறந்து போக வேண்டுமா? அதற்க்கு யார் பொறுப்பு? எந்த மருத்துவத்தை பயன்படுத்துவதென்பது மக்களின் அடிப்படை உரிமை. எல்லோரும் ஆங்கில மருத்துவத்தில் உள்ள தடுப்பு ஊசியை போடவேண்டும் என்று நிர்பந்திப்பது எப்படி சட்டப்படி சரியாகும்? அவரவர்க்கு ஏற்றுக்கொள்ளும் மருத்துவத்தை கடைப்பிடிக்க அவரவர்க்கு உரிமை உண்டு. இப்படி எதையுமே முழுமையாக தெரியாமல் சில அறிவிலிகள் உயர் பதவிகளில் இருந்து கொண்டு மக்களை வதைக்கிறார்கள்.
Rate this:
sankar - Nellai,இந்தியா
23-நவ-202121:13:30 IST Report Abuse
sankarவிதண்டாவாதம்...
Rate this:
sankar - Nellai,இந்தியா
24-நவ-202120:51:34 IST Report Abuse
sankarகோர்ட்டை அவதூறு சொல்லும் இந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோருகிறேன் - கணம் கோர்ட்டார் அவர்களே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X