பா.ஜ., ஆர்ப்பாட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., ஆர்ப்பாட்டம்

Added : நவ 23, 2021
Share
மதுரை : தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை தி.மு.க., அரசு குறைக்க கோரி பா.ஜ., நகர், புறநகர் மாவட்டம் சார்பில் மதுரை மாநகராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர்கள் சரவணன், சுசீந்திரன் தலைமை வகித்தனர். மத்திய அரசு விலையை குறைத்தது போல தி.மு.க., அரசும் வரியை குறைத்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என கோரி கோஷங்களை எழுப்பினர். மாநில பொதுச்செயலாளர்
 பா.ஜ., ஆர்ப்பாட்டம்

மதுரை : தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை தி.மு.க., அரசு குறைக்க கோரி பா.ஜ., நகர், புறநகர் மாவட்டம் சார்பில் மதுரை மாநகராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர்கள் சரவணன், சுசீந்திரன் தலைமை வகித்தனர். மத்திய அரசு விலையை குறைத்தது போல தி.மு.க., அரசும் வரியை குறைத்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என கோரி கோஷங்களை எழுப்பினர். மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசன், மாநில துணை தலைவர் மகாலட்சுமி, பார்வையாளர் கதலிநரசிங்கபெருமாள், அரசு தொடர்பு பிரிவு மாநில செயலர் ராஜரத்தினம், சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் கல்வாரி தியாகராஜன், நிர்வாகிகள் சசிராமன், ஹரிஹரன், ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அழகர்கோவில், மேலுார் ரோட்டில் பா.ஜ.,வினர் திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X