பொது செய்தி

தமிழ்நாடு

குறைகேட்பு கூட்டத்தில், மனுக்களை குவித்த மக்கள்!

Added : நவ 23, 2021
Share
Advertisement
திருப்பூர்:அடிப்படை வசதியை செய்து கொடுக்க வேண்டுமென, வீரபாண்டி ஜெ.ஜெ., நகர் மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை வைத்துள்ளனர்.பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) முருகேஸ்வரி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.l ஊத்துக்குளி, மொரட்டுப்பாளையம் செம்பா வள்ளம் மக்கள் கொடுத்த
 குறைகேட்பு கூட்டத்தில், மனுக்களை குவித்த மக்கள்!

திருப்பூர்:அடிப்படை வசதியை செய்து கொடுக்க வேண்டுமென, வீரபாண்டி ஜெ.ஜெ., நகர் மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை வைத்துள்ளனர்.பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) முருகேஸ்வரி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
l ஊத்துக்குளி, மொரட்டுப்பாளையம் செம்பா வள்ளம் மக்கள் கொடுத்த மனுவில், 'பட்டத்தரசி அம்மனுக்கு கோவிலுக்கு செல்லும் பொது வழியை, மூன்று பேர் கட்டடம் கட்டி ஆக்கிரமித்துள்ளனர்; ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்,' என்று தெரிவித்துள்ளனர்.l மூதாட்டிகள் பூவாத்தாள், 72 மற்றும் மாராத்தாள், 69 ஆகியோர் கொடுத்த மனுவில், ''எங்கள் தாயார் சென்னம்மாள் பெயரில், வீரபாண்டி கிராமத்தில், 2.67 ஏக்கர் நிலம் உள்ளது. நிலத்தை கவனித்து வந்த உறவினர் விற்பனை செய்துவிட்டார்; எங்கள் தாயாரின் சொத்தை மீட்டுத்தர வேண்டும்,' என்று தெரிவித்துள்ளனர்.l பொங்கலுார் - தேவனம்பாளையம் மக்கள் கொடுத்த மனு வில், 'சின்னக்காட்டுப்பாளையம் கிராமத்தில், நத்தம் புறம்போக்கில், 100க்கும் அதிகமான குடும்பங்கள், 13 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். வீட்டுமனை பட்டா வழங்கி, அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.l பாப்பநாயக்கன்பாளையம், பவானி நகரை சேர்ந்த பனியன் தொழிலாளி ராஜேந்திரன், ''தனியார் பள்ளியில் படிக்க வைக்க முடியாததால், இடமாற்று சான்றிதழ் கேட்டும் வழங்கப்படவில்லை. அரசு பள்ளியில் எனது மகனை சேர்க்க உதவ வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.l வீரபாண்டி, ஜெ.ஜெ., நகர் மக்கள், 'எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம். சாக்கடை, ரோடு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்,' என்றுதெரிவித்துள்ளனர்.தரையில் அமரும் முதியோர்

கலெக்டர் அலுவலகத்துக்கு நீண்ட தொலைவில் இருந்து மனு கொடுக்க வரும் முதியோர், அமர்ந்தபடி காத்திருந்து மனு கொடுக்க வசதியாக, 'பெஞ்ச்' வசதி செய்யப்பட்டது. கடந்த சில வாரங்களாக, 'போர்டிகோ'வில், 'பெஞ்ச்' போடுவதில்லை; நிற்க முடியாமல், தரையிலும், படிக்கட்டுகளிலும் பரிதாபமாக அமர்ந்தபடி முதியோர் காத்திருக்கின்றனர். வழக்கம்போல், 'போர்டிகோ'வில், பெஞ்ச் வசதி செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X