பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்... மக்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம்

Added : நவ 23, 2021
Share
Advertisement
மடத்துக்குளம் நால் ரோட்டில் தாலுகா அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதன் சித்தா பிரிவில் தினசரி நிலவேம்பு மற்றும் கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், தொடர்ந்து மழை பெய்வதால், பருவநிலை மாற்றம் அடைந்து பலருக்கும் காய்ச்சல் மற்றும் சளி பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.இதைத்தவிர்க்க, சித்தா டாக்டர் சிவக்குமார் மற்றும் மருந்தாளுனர்

மடத்துக்குளம் நால் ரோட்டில் தாலுகா அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதன் சித்தா பிரிவில் தினசரி நிலவேம்பு மற்றும் கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், தொடர்ந்து மழை பெய்வதால், பருவநிலை மாற்றம் அடைந்து பலருக்கும் காய்ச்சல் மற்றும் சளி பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.இதைத்தவிர்க்க, சித்தா டாக்டர் சிவக்குமார் மற்றும் மருந்தாளுனர் பாலுவும் மக்கள் வசிக்கும் இடங்களுக்கே சென்று, நில வேம்பு மற்றும் கபசுர குடிநீர் கொடுத்து வருகின்றனர்.இதன் ஒருபகுதியாக, பகத்சிங் சிலம்ப பயிற்சிப்பள்ளி மாணவர்கள் மற்றும் அருகிலுள்ள 150க்கும் மேற்பட்டவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர்.
இணைப்பு ரோடு விரிவுபடுத்த மனு

கொங்கல்நகரம் நால்ரோட்டில் இருந்து பிரிந்து, அணிக்கடவு செல்லும் ரோட்டை விரிவுபடுத்த வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது. இது குறித்து, விருகல்பட்டி ஊராட்சி தலைவர் அகல்யா, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் பிரகாஷ் உள்ளிட்டோர், நேற்று உடுமலை எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணனிடம் கொடுத்த மனு: கொங்கல்நகரம்-அணிக்கடவு வரையிலான 6 கி.மீ., தொலைவுக்கு ரோடு மிக குறுகலாக, நீண்ட காலமாக விரிவுபடுத்தப்படாமல் உள்ளது. இதனால், வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது.

மழைக்காலத்தில் விபத்துகள் ஏற்படும் அச்சத்துடன், வாகன ஓட்டிகள் அவ்வழியாக செல்ல வேண்டியுள்ளது. எனவே, விருகல்பட்டி உட்பட மூன்று ஊராட்சி மக் களின் நலனுக்காக ரோட்டை விரிவுபடுத்த வேண்டும்.இவ்வாறு, மனுவில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டா கேட்டு கோரிக்கை மனு கோட்டமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட, 60க்கும் மேற்பட்ட மக்கள், நேற்று உடுமலை தாலுகா அலுவலகத்தில், திரண்டு, தாசில்தாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவில், கோட்டமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில், வீடு இல்லாமல், வசிக்கும், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு, அரசு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்.இதற்காக, ஊராட்சிக்குட்பட்ட பகுதியில், நிலத்தை கையகப்படுத்தி, வீட்டு மனை பட்டா வழங்கினால், விவசாய தொழிலாளர்கள் உட்பட 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்பெறுவார்கள். இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,' இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மா.கம்யூ., குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் சசிகலா, மாவட்ட குழு உறுப்பினர் ரங்கநாதன், கூட்டுறவு சங்கத்தலைவர் வெங்கிடபதி உட்பட பலர் உடனிருந்தனர்.'உழவன்' செயலியில் கூடுதல் வசதி தமிழக அரசு, வேளாண்துறை சார்பில், விவசாயிகள், மானியத்திட்டங்களை தெரிந்து கொள்ளவும், விண்ணப்பிக்கவும், 'உழவன்' மொபைல் செயலி பயன்பாட்டில் உள்ளது. இந்த செயலியில், வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை வாரியம், வானிலை அறிவிப்புகள், மானிய திட்டங்களுக்கு விண்ணப்பித்தல், விளைபொருட்கள் விற்பனைக்கான சந்தை விபரங்கள் உட்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், வேளாண்துறை சார்ந்த, பட்டு வளர்ச்சித்துறையின் தகவல்களையும், உழவன் செயலியில், பதிவேற்றம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அவ்வகையில், தற்போது, பட்டு வளர்ச்சித்துறை விபரங்களை தெரிந்து கொள்ளும் வசதி, கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில், வட்டாரவாரியாக, அலுவலர்கள் பெயர், தொடர்பு எண், பட்டுக்கூடு கொள்முதல் மையத்தில், விலை விபரங்கள் பதிவேற்றப்படுகிறது. இவ்வசதியை, விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு, வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ரோடு எப்ப போடுவீங்க ஆபீசர்!
பொள்ளாச்சி அம்பராம்பாளையத்தில் இருந்து, சிங்காநல்லுார் செல்லும் ரோட்டில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன், குடிநீர் குழாய் பதிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, கெட்டிமல்லன்புதுார் பிரிவு வரை, ரோட்டின் ஒரு பகுதி தோண்டப்பட்டது.குழாய் பதிக்கும் பணி நிறைவடைந்து ஆறு மாதங்களாகியும், நெடுஞ்சாலை துறையினர் ரோட்டை சீரமைக்காமல் அப்படியே விட்டுள்ளனர். சமீபத்தில் பெய்த கனமழைக்கு, ரோடு சேறும் சகதியுமாக மாறி, வாகன போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறியுள்ளது.வேறு வழியின்றி அவ்வழித்தடத்தில் பயணிக்க நேரும் வாகன ஓட்டுனர்கள், தடுமாறி விபத்துக்குள்ளாகி, சேறும் சகதியுமாக செல்லும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன.

பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருந்தும், ரோட்டை சீரமைக்காமல் நெடுஞ்சாலை துறையினர் அலட்சியாக உள்ளனர். உள்ளாட்சி நிர்வாகங்களும் கண்டுகொள்ளாமல் இருப்பதால், மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
குடியிருப்போர் நலச்சங்கம் மனு
பொள்ளாச்சி சுப்பையன் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் செயலாளர் ஆனந்தபிரபு மற்றும் நிர்வாகிகள், நகராட்சி கமிஷனரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி நகராட்சி டி.கோட்டாம்பட்டி வார்டு எண், 8ல், அமைந்துள்ள அங்கீகரிக்கப்பட்ட சுப்பையன் நகர் மனைப்பிரிவில் உள்ள பூங்காவை, குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பில் பராமரித்து கொள்ளவும், பயன்படுத்திக்கொள்ளவும் அனுமதித்து அரசாணை வழங்க வேண்டும்.பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில் இருந்து, அண்ணா நகர் வரும் ரோடு மிக மோசமாக உள்ளது. நீண்ட நாட்களாக பழுதடைந்த ரோட்டை சீரமைக்காமல் உள்ளதால் விபத்துகள் ஏற்படுகிறது.
ரோட்டை உடனடியாக சீரமைக்க வேண்டும். அண்ணா நகர் முழுவதும் கற்கள் போடப்பட்டும் ரோடு அமைக்கப்படாமல் உள்ளது. அதனை சீரமைக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.அங்கன்வாடி மையம் திறப்புபொள்ளாச்சி நகராட்சி ஏ.பி.டி., ரோட்டில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ஒன்பது லட்சம் ரூபாய் செலவில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், திறப்பு விழா நேற்று நடந்தது.எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்து, அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார். கொரோனா தொற்று பரவல் உள்ளதால், அங்கன்வாடியில் சுகாதார பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளை கண்ணும் கருத்துமாக பராமரிக்க வேண்டும், என, அங்கன்வாடி பணியாளர்களிடம், எம்.எல்.ஏ., அறிவுறுத்தினார்.
காணொலியில் மருத்துவமனை திறப்பு

வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மகப்பேறு பிரிவு, காய்ச்சல் பரிசோதனை பிரிவு, ஆய்வகம், கண் சிகிச்சை பிரிவு மற்றும் டாக்டர்கள், நர்ஸ்களுக்கான குடியிருப்புகள் கட்டப்பட்டன.பணிகள் நிறைவடைந்து, ஆறு மாதத்திற்கு மேலாகியும் திறக்காமல் இருந்தது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், கோவையில் நடந்த நிகழ்ச்சியில், காணொலி வாயிலாக இந்த கட்டடத்தை, நேற்று திறந்து வைத்தார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, வட்டார மருத்துவ அலுவலர் பாபுலட்சுமணன் தலைமை வகித்தார். அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் நவரத்தினராஜா, மகப்பேறு மருத்துவர் டாக்டர் மகேஷ்ஆனந்தி ஆகியோர் குத்துவிளக்கேற்றி, இனிப்பு வழங்கினர்.

நிகழ்ச்சியில், அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.உள்ளாட்சிக்கு பா.ஜ., ஆர்வம்உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதையடுத்து, பல்வேறு கட்சிகளின் சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.வால்பாறை நகராட்சியில் மொத்தம் உள்ள, 21 வார்டுகளில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம், பா.ஜ., கட்சி அலுவலகத்தில் விண்ணப்பம் பெறப்பட்டன. நிகழ்ச்சிக்கு, பா.ஜ., மண்டலத்தலைவர் சுந்தர்ராஜன் தலைமை வகித்தார். மாநில விவசாய அணி துணைத்தலைவர் ரமேஷ்பாபா, மாவட்ட துணைத்தலைவர் தங்கவேல் ஆகியோர் விண்ணப்பங்களை பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X