இந்தியா

சபரிமலை வருமானம் 9 மடங்கு உயர்வு

Updated : நவ 23, 2021 | Added : நவ 23, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சபரிமலை : சபரிமலை காணிக்கை உள்ளிட்ட வருமானம் கடந்த ஆண்டோடு ஒப்பிடும் போது இந்தாண்டு ஒன்பது மடங்கு உயர்ந்துள்ளது.கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனின் துவக்கத்தில், 2,000 பேரும், பின், 5,000 பேரும் அனுமதிக்கப்பட்டனர். இந்த சீசனில் துவக்கம் முதலே 30 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கேற்ப
 சபரிமலை வருமானம் 9 மடங்கு உயர்வு

சபரிமலை : சபரிமலை காணிக்கை உள்ளிட்ட வருமானம் கடந்த ஆண்டோடு ஒப்பிடும் போது இந்தாண்டு ஒன்பது மடங்கு உயர்ந்துள்ளது.
கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனின் துவக்கத்தில், 2,000 பேரும், பின், 5,000 பேரும் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சீசனில் துவக்கம் முதலே 30 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கேற்ப சபரிமலையில் தேவசம் போர்டின் வருமானமும் அதிகரித்துள்ளது.


latest tamil news



கடந்த ஆறு நாட்களில் மட்டும் 5 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இது கடந்தாண்டு இதே காலத்தோடு ஒப்பிடும் போது ஒன்பது மடங்கு அதிகம். பெருமழை மற்றும் காலநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக கடந்த ஆறு நாட்களில் தினசரி, 7,000 பக்தர்கள் மட்டுமே வந்து சென்றுள்ளனர். இனி வரும் நாட்களில் இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்பம், அரவணை விற்பனை மற்றும் காணிக்கையில் ௧ கோடி ரூபாய் கிடைத்துள்ளது. நடை திறந்த பின்னர் சபரிமலையில் கடைகள் ஏலத்தில் 1.5 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
கொரோனா காரணமாக தனலெட்சுமி வங்கி மூலம் 'ஆன்லைன்' காணிக்கை செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் சபரிமலை வருமானம் மேலும் அதிகரிக்கும் என்றும் சபரிமலை நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமார் கூறினார்.

'ஹெல்ப்லைன்' எண் மாற்றம்

சபரிமலை பக்தர்களுக்காக www.sabarimala.kerala.gov.in என்ற இணையதளம் உள்ளது. சபரிமலை பூஜைகள், வழிபாடு விபரங்கள், கட்டணம், நடை திறந்து அடைக்கும் தேதி போன்ற அனைத்தும் இதில் உள்ளது. இதில் பக்தர்கள் உதவிக்காக ஒரு அலைபேசி எண் வெளியிடப்பட்டிருந்தது.


இந்த எண் திருப்பூணித்துறையை சேர்ந்த ஸ்ரீகுமார் என்பவருக்கு சொந்தமானது. கடந்த மூன்று ஆண்டுகளாக சபரிமலை சீசன் வந்து விட்டால் இவரது அலைபேசிக்கு ஓய்வு இருக்காது. ஒரு கட்டத்தில் அதிக அழைப்பு வந்ததால் கேரள போலீஸ் டி.ஜி.பி.,க்கு புகார் அனுப்பி, தன் எண்ணை அதில் இருந்து விடுவிக்கும்படி கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


இதைத் தொடர்ந்து, ஸ்ரீகுமார் மலையாள நாளிதழ்களின் உதவியை நாடியதால் அது செய்தியாக வெளியானது. இதையடுத்து இந்த இணையதளத்தை பராமரிக்கும் சி - டிட் நிறுவனம் தவறை சரி செய்து அந்த எண்ணுக்கு பதிலாக புதிய எண்களை பதிவேற்றியுள்ளது. இதன்படி 04735 202 100, 04735 202 016, 99461 00100 ஆகிய எண்கள் புதிய 'ஹெல்ப்லைன்' எண்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா
23-நவ-202104:57:20 IST Report Abuse
Srivilliputtur S Ramesh சபரிமலையின் வருமானம் சரி.. அந்தப்பணம் எங்கே போகிறது? நேராக கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் பாக்கெட்டிற்கு போகிறது... எல்லாமே அங்கு காண்ட்ராக்ட் ஒப்பந்தம் தான்.. கம்யூனிஸ்டுகள் அந்த ஐயப்பன் கோவிலை வைத்து கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள்..
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
23-நவ-202102:29:04 IST Report Abuse
Natarajan Ramanathan ஒரு தவறான தொலைபேசி எண்ணை மாற்ற டிஜிபிவரை புகார் அளித்தும்கூட நடவடிக்கை எடுக்காத அளவுக்கு கேரளம் முன்னேறியுள்ள மாநிலம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X